மொத்தம் 54 லட்சம்.. ஸ்ரேயாஸ் ஐயர் – பாண்டியா, 22 வீரர்களுக்கும் அபராதம் விதித்த பிசிசிஐ.. காரணம் என்ன?

Shreyas Iyer 3
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஜூன் 1ஆம் தேதி குவாலிபயர் 1 போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் இறுதிப் போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்ள தகுதி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பைக்கு அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 44, திலக் வர்மா 44, ஜானி பேர்ஸ்டோ 38, நமன் திர் 37 ரன்களை எடுத்தார்கள்.

அதனால் மும்பை 204 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய பஞ்சாப் மிகச்சிறப்பாக விளையாடிய 19 ஓவரிலேயே 207/5 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. அந்த அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 87* ரன்கள் விளாசி வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அவருடன் ஜோஸ் இங்லிஷ் 38, நேஹல் வதேரா 48 ரன்களை அடித்து வெற்றியில் பங்காற்றினர்.

- Advertisement -

ஃபைனலில் பஞ்சாப்:

அதனால் 2014க்குப்பின் 11 வருடங்கள் கழித்து இறுதி போட்டியில் விளையாட பஞ்சாப் தகுதி பெற்றது. மறுபுறம் முதல் முறையாக 200 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோற்ற மும்பை தொடரிலிருந்து வெளியேறியது. இந்நிலையில் இந்தப் போட்டியில் பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த வருடம் பஞ்சாப் இரண்டாவது முறையாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பௌலிங் செய்து முடிக்கவில்லை. அதனால் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதே போல இரண்டாவது முறை தவறு செய்துள்ளதால் பஞ்சாப் அணியின் அனைத்து வீரர்களுக்கும் தலா 6 லட்சம் அல்லது 25% போட்டி சம்பளம் அபராதமாக விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஜோடியாக அபராதம்:

அதே போல மும்பை அணியும் இந்தப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பவுலிங் செய்து முடிக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் மும்பை அணி 3வது முறையாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பவுலிங் செய்து முடிக்கவில்லை. அதனால் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 30 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஷாட் ஆஃப் ஐபிஎல் ஷ்ரேயாஸ்க்கு சல்யூட்.. நானா இருந்தா பும்ராவிடம் உடைஞ்சுருப்பேன்.. பாராட்டிய ஏபிடி

3வது முறையாக பந்து வீசி முடிக்கத் தவறிய எஞ்சிய அனைத்து மும்பை வீரர்களுக்கும் தலா 12 லட்சம் அல்லது 50% போட்டி சம்பளம் அபராதமாக விதிக்கப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்த வகையில் இரு அணி கேப்டன்களுக்கும் சேர்த்து மொத்தம் இப்போட்டியில் 54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல இம்பேக்ட் உட்பட 2 அணிகளைச் சேர்ந்த எஞ்சிய 2 வீரர்களும் அபராதம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement