நெட் பவுலருக்கு அன்புப்பரிசு வழங்கி பெரிய மனதை காட்டிய ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ

Shreyas and Jaskiran
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக துபாய் சென்றுள்ள வேளையில் இந்த தொடரின் முதல் இரண்டு லீக் ஆட்டங்களிலும் விளையாடியுள்ள இந்திய அணி வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டது. அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் போட்டியானது நாளை துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

நெட் பவுலரை நெகிழ்வைத்த ஷ்ரேயாஸ் ஐயர் :

இதன் காரணமாக இந்திய வீரர்கள் அனைவரும் துபாயில் உள்ள ஐசிசி அகாடமி மைதானத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் வலைப்பயிற்சியின் போது உதவிய நெட் பவுலருக்கு அன்பு பரிசு வழங்கிய தகவல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் யு.ஏ.இ அணிக்காக விளையாடும் ஜஸ்கிரன் சிங் தற்போது துபாயில் பயிற்சி பெற்று வரும் அணிகளுக்கு நெட் பவுலராக பந்துவீசி உதவி வருகிறார். ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு வலைப்பயிற்சியின் போது உதவிய அவர் இந்திய அணி பயிற்சியில் பங்கேற்றபோதும் நெட் பவுலராக இருந்து வந்துள்ளார்.

அவரை கவனித்த இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் அவரிடம் சென்று உங்களுடைய ஷூ சைஸ் என்ன? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் 10 என்று தெரிவிக்கவே உடனடியாக அவருக்கு புதிய ஷூ ஒன்றை அதே சைஸில் பரிசாக வழங்கி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இது குறித்து பேசிய ஜஸ்கிரன் சிங் கூறுகையில் : ஏற்கனவே நான் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சியின்போது அவர்களுக்கு பந்து வீசியிருந்தேன்.

- Advertisement -

ஆனால் இந்திய அணியில் அதிகமாக சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் என்னால் இந்திய வீரர்களுக்கு பந்துவீச முடியாமல் போனது. இருப்பினும் பயிற்சியின்போது அவர்களுடன் இருந்தேன். அப்போது லாங் ஆஃப் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது ஷ்ரேயாஸ் ஐயர் என்னிடம் வந்து எப்படி இருக்கிறாய்? என்று கேட்டதோடு சேர்ந்து ஷூ சைஸ் என்ன? என்று கேட்டார்.

இதையும் படிங்க : இது இருந்தா போதும்.. திறமையான ஆப்கன் அடுத்த 10 வருஷத்துக்குள் ஐசிசி உ.கோ ஜெய்ப்பாங்க.. ஸ்டைன் உறுதி

அதற்கு நான் 10 என்று கூறியதும் உடனடியாக எனக்கு ஒரு புதிய ஷூ ஒன்றை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தினார். உண்மையிலேயே இந்த நாளை அவர் மிகச் சிறப்பான நாளாக மாற்றி இருக்கிறார். இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனான அவர் இப்படி ஒரு பரிசை வழங்கியது என்னால் மறக்க முடியாத ஒன்று என ஜஸ்கிரன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement