இது இருந்தா போதும்.. திறமையான ஆப்கன் அடுத்த 10 வருஷத்துக்குள் ஐசிசி உ.கோ ஜெய்ப்பாங்க.. ஸ்டைன் உறுதி

Dale Styen
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்தத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் தங்களது 2வது போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதன் வாயிலாக சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் முதல் முறையாக தங்களுடைய வெற்றியைப் பதிவு செய்து ஆப்கானிஸ்தான் சாதனை படைத்தது.

சமீப காலங்களாகவே மிகச்சிறப்பாக விளையாடி வரும் அந்த அணி 2023 உலகக் கோப்பையில் ஏற்கனவே இங்கிலாந்தை தோற்கடித்தது. அத்துடன் வலுவான பாகிஸ்தானையும் சென்னையில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்று அசத்தியது. 2024 டி20 உலகக் கோப்பையில் வலுவான நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளையும் அடுத்தடுத்து தோற்கடித்து ஆப்கானிஸ்தான் மிரட்டியது.

- Advertisement -

திறமையான ஆப்கானிஸ்தான்:

அதன் காரணமாக ஐசிசி தொடரின் வரலாற்றில் முதல் முறையாக செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று ஆப்கானிஸ்தான் சாதனை படைத்தது. அந்த வகையில் மிகப்பெரிய எழுச்சி கண்டு வரும் ஆப்கானிஸ்தான் இந்தத் தொடரில் வலுவான இங்கிலாந்தை தோற்கடித்தது. அதே சமயம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசிப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை ஆப்கானிஸ்தான் தவற விட்டது.

இருப்பினும் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகளை காட்டிலும் ஆப்கானிஸ்தான் மிகச் சிறப்பாக செயல்பட்டது என்று சொல்லலாம். இந்நிலையில் நல்ல திறமையைக் கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி அழுத்தமான நேரங்களில் பதறாமல் பொறுமையாக இருந்து செயல்படும் யுக்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜாம்பவான் டேல் ஸ்டைன் தெரிவித்துள்ளார். அதை செய்தால் அடுத்த 10 வருடங்களுக்குள் கண்டிப்பாக ஆப்கானிஸ்தான் ஒரு ஐசிசி கோப்பையை வெல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பொறுமை முக்கியம்:

இது பற்றி ஸ்டைன் பேசியது பின்வருமாறு. “தற்போது மக்களிடம் பொறுமை இல்லாத நேரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வெறும் 2 நிமிடத்தை கொண்ட இன்ஸ்டாகிராம் கதையைக் கூட நான் அதிகமாகவே பார்க்கிறோம். அதே போலவே ஆப்கானிஸ்தான் வீரர்களும் அவர்களுடைய கிரிக்கெட்டும் இருக்கிறது என்று கருதுகிறேன். பொறுமை என்பது ஆப்கானிஸ்தான் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பெரிய விஷயமாகும்”

இதையும் படிங்க: அரையிறுதி போட்டிக்கான ஆஸ்திரேலிய துவக்க வீரருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் – என்ன நடந்தது?

“அதை ஒருமுறை கற்றுக் கொண்டு விட்டால் நேர்மையைச் சொல்ல வேண்டுமெனில் அடுத்த தசாப்தத்தில் ஆப்கானிஸ்தான் ஐசிசி தொடர்களை வெல்வார்கள். அவர்கள் இந்தப் பந்தில் விக்கெட் கிடைத்தாக வேண்டும் என்பது போன்ற வேகமான விஷயங்களை விரும்புகிறார்கள். அதே போல அவர்களின் பேட்ஸ்மேன்கள் முதல் ஓவரிலேயே ஸ்விங் இருக்கும் போது சிக்ஸர் அடிக்க முயற்சிக்கிறார்கள். எனவே அவர்கள் பொறுமையைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Advertisement