இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பதிலாக மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் முதலாவது இன்னிங்சில் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அதனைத் தொடர்ந்து நான்காம் நாளான இன்று இந்திய அணி 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் தத்தளித்த போது பின்வரிசை வீரர்களுடன் கைகோர்த்த ஷ்ரேயாஸ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது இன்னிங்சிலும் முக்கியமான அரை சதத்தை அடித்தார்.

இந்த இரண்டாவது இன்னிங்சில் 125 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 61 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே சதம் மற்றும் அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்நிலையில் இந்த இரண்டாவது இன்னிங்சில் இவர் ஆட்டமிழந்து வெளியேறியபோது பெவிலியனில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இக்கட்டான வேளையில் சிக்கலில் இருந்த அணியை மீட்டு கொண்டுவந்த அவருக்கு பெவிலியன் திரும்பும்போது அணி வீரர்கள் மட்டுமின்றி சப்போர்ட் ஸ்டாப், இந்திய அணி நிர்வாகிகள் என அனைவரும் எழுந்து நின்று அவருக்கு கைதட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த வேளையில் ஷ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி 234 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்காரணமாக இந்த போட்டியில் இந்திய அணி கடைசி நாளில் வெற்றிபெறவும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க : கடுமையான வலியையும் பொறுத்துக்கொண்டு விளையாடிய இந்திய வீரர் – பயம் எப்படி எல்லாம் வேலை செய்யுது
ஷ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்த இந்த அருமையான வரவேற்பு தற்போது இணையத்தில் புகைப்படமாக வைரலாவது மட்டுமின்றி அவரின் இந்த அசத்தலான ஆட்டத்திற்கு பாராட்டுக்களும் குவிந்த வருவது குறிப்பிடத்தக்கது.



