
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன.
இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாத இரு அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி நடைபெறயிருக்கிறது.
இதன் காரணமாக இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றும் என்பதனால் இம்முறை கோப்பையை கைப்பற்றப்போகும் அணி குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. அதேவேளையில் இரு அணி ரசிகர்களும் தற்போது தங்களது அணி வெற்றிபெற வேண்டும் என்ற தங்களது விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் விளையாடுவதற்கு முன்னதாக ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் ரஜத் பட்டிதார் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் மோதியிருந்தனர். அதன்படி கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி நடந்த சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டியில் இவர்கள் இருவரும் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தினர்.
அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் ரஜத் பட்டிதார் தலைமையிலான மத்திய பிரதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தார். அதன்படி முதலில் விளையாடிய மத்திய பிரதேச அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது.
இதையும் படிங்க : என் சப்போர்ட் ஆர்சிபி’க்கே.. ஆனா இந்தியா மாதிரி கப் ஜெய்க்க மாட்டாங்க.. ஜிங்க்ஸ் செய்த சேவாக் பேட்டி
அதன்பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 17.5 ஓவர்களுக்கு எல்லாம் இலக்கை எட்டி சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்படி இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணி வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.