- Advertisement -
உலக கிரிக்கெட்

தனக்கு பிடித்த பேட்ஸ்மேன், பவுலர் மற்றும் தோனியின் கடைசி போட்டி என Helo வில் பகிர்ந்த – அக்தர்

உலக நாடுகள் அனைத்தும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தில் சிக்கித் தவித்து வருகிறது. இதில் இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடரை மீண்டும் நடத்தி நிதிசேகரிக்க வேண்டும் என்று சர்ச்சையான கருத்தை கூறி பல எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் சமூக வலைதளமான ஹலோ ஆப்பில் சிறப்பு லைவில் பேசிய அவர் கிரிக்கெட் குறித்த பல்வேறு விடயங்களையும் பொதுவான பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் முக்கியமானவற்றை நாங்கள் இதோ உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம் . இதில் தனிப்பட்ட முறையில் தான் எந்த கிரிக்கெட் வீரருக்கு ரசிகன், சிறந்த 5 பேட்ஸ்மேன்கள், ஆல்டைம் பேவரைட் பவுலர் என பலவற்றை அவர் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த தகவல்கள்

- Advertisement -

Heloவில் சிறப்பு Live-ல் உலகின் முன்னாள் அதிவேக பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். அதில், முக்கியமானவை:

1. போராட்டமின்றி என் வாழ்க்கையில் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை.

- Advertisement -

2.லாக் டவுன் என்பது இந்திய பிரதமர் மோடியின் சிறந்த முடிவு.

3.இந்தியாவில் இருந்து வந்த வெடிப்பு தான் விராட் கோலி.

- Advertisement -

4.தொற்றுநோயால் விளையாட்டுத்துறை கடுமையாக பாதிக்கப்படும்.

5.இந்த ஆண்டு உலகக்கோப்பை நடப்பதாக எனக்கு தெரியவில்லை.

- Advertisement -

6. தற்போது, மேட்ச் ஃபிக்ஸிங் இல்லாமல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

7.விளையாட்டு மூலம் இந்தியா – பாகிஸ்தான் இடையே இருதரப்பு நல்லுறவை ஏற்படுத்தக்கூடிய நேரம் இது.

8.நான் இந்தியாவையோ அல்லது இந்தியர்களையோ புகழ்ந்து பேசவில்லை .. எல்லைகளைக் கடந்து அனைவரையும் நேசிக்கிறேன்.

9.தோனிக்கு விடைபெறும் போட்டி கிடைக்கக்கூடும்.

10.தொற்றுநோயிலிருந்து அனைவரும் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

11.தனிப்பட்ட முறையில் நான் ஒரு ரோஹித் ஷர்மா ரசிகன், சிறந்த பேட்ஸ்மேன்.

12.சச்சின் ஒருபோதும் ஸ்லெட்ஜிங்கில் ஆர்வம் காட்டவில்லை. நான் உங்களுக்கு பேட் மூலம் பதிலளிப்பேன் என்று சச்சின் கூறினார்.

13.டாப் 5 பேட்ஸ்மேன்கள் – பாபர், கோலி ,ரோஹித், ரூட், வில்லியம்சன்

14. ஆல் டைம் ஃபேவரெட் பவுலர் – ஷேன் பாண்ட்

15. கிரிக்கெட்டின் தரம் இப்போது சற்று குறைந்துவிட்டது.

- Advertisement -
Published by