இந்திய அணிக்கு எதிராக மட்டும் நான் சிறப்பாக விளையாட நினைப்பதன் காரணம் இதுதான் – சோயிப் மாலிக் பேட்டி

- Advertisement -

தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் மிகப் பெரும் பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ள இந்திய அணியைப் பாரட்டாத கிரிக்கெட் வீரர்களே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு கடந்த சில ஆண்டுகளாகவே கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடரில் அரையிறுதி வரை முன்னேறிச் சென்ற இந்திய அணி, அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி அசத்தியது.

IND

- Advertisement -

தற்போது ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியுள்ள இந்திய அணியைப் பாராட்டி பேசிய பாகிஸ்தான் அணியின் வீரரான சோயிப் மாலிக், இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடவே தான் எப்போதும் விரும்பியதாகவும், இந்திய அணிக்கு எதிராக நன்றாக விளையாடுவது ஒரு வீரரை கிரிக்கெட் அரங்கில் சூப்பர் ஸ்டாராக மாற்றும் என்றும் கூறியிருக்கிறார். இந்திய அணி குறித்து பேசிய அவர்,

இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதே என்னுடைய நோக்கமாக இருந்தது. அதேபோல் என்னுடைய சிறப்பான இன்னிங்சுகள் பலவும் இந்திய அணிக்கு எதிராகவே அமைந்துள்ளன. உலகிலேயே பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழும் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவது, கிரிக்கெட் அரங்கில் அந்த வீரரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்த்திற்கு கொண்டு செல்லும்.

malik 1

மேலும் இந்தியாவிற்கு எதிரான ஒரே ஒரு சிறந்த செயல்திறன் என்பது, உச்சத்தில் இருக்கும் மற்ற நான்கு அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட்டதற்கு சமமானதாக இருக்கும் என்று கூறிய அவர், இந்தியாவிற்கு எதிரான வெளிப்பாடு எப்போதுமே மற்றவைகளுடன் ஒப்பிட முடியாததாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

malik

39 வயதாகும் சோயிப் மாலிக் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட்டை இந்திய அணிக்கு எதிராகத்தான் தொடங்கினார். 2019ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக அவர் விளையாடிய ஒரு நாள் போட்டிதான் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் விளையாடிய கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியாகவும் இருக்கிறது. அதற்கு பிறகு பாகிஸ்தான் அணியில் இடம்பிடிக்காத அவர், இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement