கடமையை செய்ங்க.. பாகிஸ்தான் கொடுக்கும் நல்ல வாய்ப்பை இந்தியா மிஸ் பண்ணக்கூடாது.. சோயப் மாலிக் ஓப்பன்டாக்

Shoaib Malik
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மண்ணில் நடைபெறுகிறது. எனவே அதை வெற்றிகரமாக நடத்துவதற்கு அந்நாட்டு வாரியம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஆனால் அத்தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மாட்டோம் என்று இந்தியா அடம் பிடித்து வருகிறது.

ஏனெனில் 2008க்குப்பின் எல்லை பிரச்சினை காரணமாக அந்நாட்டுக்கு செல்வதை மொத்தமாக நிறுத்தியுள்ள இந்தியா ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடரில் மட்டுமே பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது. ஆனால் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்றது. அந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா தங்களது போட்டிகளை இலங்கை மண்ணில் விளையாடி வெற்றியும் கண்டது.

- Advertisement -

நல்ல வாய்ப்பு:
எனவே இம்முறையும் தங்களுடைய சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. மறுபுறம் தங்கள் நாட்டுக்கு வராவிட்டால் இந்தியாவை ஒதுக்கி வைத்து விட்டு தொடரை நடத்துவோம் என்று பாகிஸ்தான் வாரியம் திட்டவட்டமாக சொல்லி வருகிறது. அத்துடன் இந்தியாவை வர வைப்பது உங்களுடைய வேலை என்று ஐசிசியிடம் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு சென்று பாகிஸ்தான் அணி விளையாடியதாக முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார். எனவே இம்முறை பாகிஸ்தானுக்கு வந்து விளையாடுவது இந்தியாவின் கடமை என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட தற்போதைய இந்திய அணியின் அனைத்து வீரர்களுமே பாகிஸ்தானில் விளையாடியதில்லை என்றும் மாலிக் கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே பாகிஸ்தானில் இந்திய வீரர்கள் விளையாடுவதற்காக தாங்கள் கொடுக்கும் வாய்ப்பை பிசிசிஐ தவற விடக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி பாகிஸ்தான் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இரு நாடுகளுக்கும் உள்ள எந்த வகையான பிரச்சனையும் அல்லது சர்ச்சையும் ஒரு தனிப்பட்ட விஷயம். அது அதற்கு தேவையான வழியில் தனித்தனியாக தீர்க்கப்பட வேண்டும்”

இதையும் படிங்க: தங்கமான ராகுல் டிராவிட்.. எப்போவும் இந்திய வீரர்களிடமிருந்து அதை எடுத்துக்க மாட்டாரு.. பராஸ் மாம்ப்ரே பாராட்டு

“ஆனால் விளையாட்டில் அரசியல் வரக்கூடாது. கடந்த வருடம் இந்தியாவுக்கு சென்று பாகிஸ்தான் அணி விளையாடியது. எனவே தற்போது பாகிஸ்தானுக்கு வருவதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. இந்திய அணியில் உள்ள தற்போதைய வீரர்கள் பாகிஸ்தானில் விளையாடியதில்லை என்று நினைக்கிறேன். எனவே இது அவர்களுக்கு நல்ல வாய்ப்பு. நாங்கள் இந்திய அணிக்கு சிறந்த வரவேற்பையும் விருந்தோம்பலையும் கொடுப்போம். அவர்கள் வருவார்கள் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement