இதுக்காக சீக்கிரமே இந்தியா வருத்தப்பாடுவாங்க.. உழைச்சதை விட்டுட்டு போலாமா? சோயப் மாலிக் விமர்சனம்

Shoaib Malik
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. அதனால் அத்தொடரில் பாகிஸ்தானை ஹாட்ரிக் முறையாக வீழ்த்திய இந்தியா 9வது முறையாக ஆசியக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்தப் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வாரியத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இருப்பினும் அவரது கையால் கோப்பையை வாங்க முடியாது என்று இந்திய அணி தெரிவித்து விட்டனர். அதனால் அவமானப்பட்ட நக்வி இந்தியா எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்த்து விடுகிறேன் என்ற வகையில் கோப்பையைக் கையோடு எடுத்துச் சென்றார். மறுபுறம் ஆசிய கவுன்சில் தலைவராகவும் இருக்கும் அவர் வேறு யாரிடமாவது கொடுத்து கோப்பையைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் இந்திய அணியினர் மைதானத்தில் காத்திருந்தனர்.

- Advertisement -

சீக்கிரம் இந்தியா வருந்தும்:

ஆனால் இந்தியா வாங்க மறுத்ததால் கோப்பை கொடுக்கப்படவில்லை என்று 45 நிமிடங்கள் கழித்து ஆசியக் கவுன்சில் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதற்காக ஏமாற்றமடையாத இந்திய அணியினர் கையில் கோப்பையை வைத்திருப்பது போல் கொண்டாடி நக்வி மற்றும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் இந்திய அணி கடினமாக உழைத்து ஆசியக் கோப்பையை வென்றதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த கோப்பையை பாகிஸ்தான் தலைவர் என்பதற்காக நக்வி கைகளால் இந்தியா வாங்காதது தவறு என்றும் அவர் விமர்சித்துள்ளார். அதற்காக இந்தியா சீக்கிரம் வருத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசுவது பின்வருமாறு. “ஆசியக் கோப்பையை வெல்வதற்காக வீரர்கள் எவ்வளவு அழுத்தத்திற்குள் சென்றனர் என்பதைப் பாருங்கள்”

- Advertisement -

மாலிக் கருத்து:

“துபாயில் எவ்வளவு வெப்பத்தில் அவர்கள் கடினமாக உழைத்து விளையாடினார்கள் என்பதையும் பாருங்கள். ஏன் அவர்கள் கடினமாக உழைத்தனர்? ஏனெனில் ஆசிய கோப்பையை வெல்வதற்காகவே உலைத்தனர். அப்படி கடினமாக உழைத்த நீங்கள் கடைசியில் கோப்பையை வாங்கக் கூட வரவில்லை. நெருக்கமான இறுதிப் போட்டியில் நீங்கள் வென்றது மிகப்பெரிய சாதனை”

இதையும் படிங்க: இந்தியாவை கதவை மூடல.. பாகிஸ்தான் தலைவர் தான் கோப்பையை தூக்கிட்டு ஓடிட்டாரு.. சூரியகுமார் பேட்டி

“இன்று வேண்டுமானால் இந்திய அணி இப்படி கொண்டாடலாம். ஆனால் நீண்ட கால பார்வையில் சில வருடங்கள் கழித்து அது உங்களை மீண்டும் வருத்தமடைய வைக்கும். கடினமாக உழைத்துக் கோப்பையை வென்ற நாம் ஏன் வாங்காமல் விட்டோம்? என்று அவர்கள் நினைப்பார்கள். அவர்கள் அனைவரும் விளையாட்டு வீரர்கள். எனவே களத்தில் உங்களுடைய சிறந்த செயல் திறனை வெளிப்படுத்து மட்டுமே உங்களுடைய வேலை” என்று கூறினார்.

Advertisement