காலையில் 3வது திருமணம்.. மாலையில் பேட்டிங்.. டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைத்த சோயப் மாலிக்

Shoaib Malik
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் ஜனவரி 20ஆம் தேதி தன்னுடைய 3வது திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். பாகிஸ்தானுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி ரசிகர்களிடம் புகழ்பெற்ற அவரை இந்தியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா காதல் திருமணம் செய்து கொண்டார். சொல்லப்போனால் ஏற்கனவே ஒரு திருமணம் முடிந்து பிரிந்திருந்த அவரை சானியா 2வது திருமணம் செய்திருந்தார்.

அந்த காலகட்டங்களில் அது இந்திய ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த சமயங்களில் பாகிஸ்தானிடம் சந்திக்கும் ஓரிரு தோல்விகள் சானியா மிர்சாவுக்கு நாங்கள் கொடுக்கும் தாய் வீட்டு சீதனம் என்று இந்திய ரசிகர்கள் பேசியதை மறக்க முடியாது. இருப்பினும் சமீப காலங்களாகவே அவர்களுக்கிடையே மனக்கசப்பு இருப்பதாக செய்திகள் வெளி வந்தன.

- Advertisement -

மாலையில் சாதனை:
அதன் உச்சமாக கடந்த வாரம் முழுவதுமாக வெள்ளை நிறத்திலான உடையை அணிந்து சோகமான புகைப்படத்தை சானியா மிர்சா பதிவிட்டிருந்தார். அந்த சூழ்நிலையில் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தை செய்து கொண்ட பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகை சனா ஜாவேத்தை 3வது முறையாக திருமணம் செய்துள்ளதாக புகைப்படத்துடன் சோயப் மாலிக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதனால் சோயப் மாலிக் மற்றும் சானியா மிர்சா ஆகியோர் அதிகாரப்பூர்வமாக பிரிந்தது வெளிவந்தது இந்தியா – பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த நிலையில் ஜனவரி 20ஆம் தேதி காலை திருமண அறிவிப்பை வெளியிட்ட சோயப் மாலிக் அன்று மாலை வங்கதேசத்தில் நடைபெறும் பிபிஎல் 2024 சீசனில் ஃபார்சூன் பரிசால் அணிக்காக விளையாடினார். அந்த போட்டியில் டாஸ் வென்ற பரிசால் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ரங்ப்பூர் டைகர்ஸ் 20 ஓவரில் 134/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

அதிகபட்சமாக சமீம் ஹொசைன் 29 ரன்கள் எடுக்க பரிசால் சார்பில் அதிகபட்சமாக கலீட் அகமது 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதன் பின் 135 ரன்களை துரத்திய பரிசால் அணிக்கு தமீம் இக்பால் 35, முஸ்பிகர் ரஹீம் 26, சோயப் மாலிக் 17*, மொஹமதுல்லா 19* ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் 19.1 ஓவரில் எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் ராங்பூர் அணிக்கு சாகிப் அல் ஹாசன், ஹசன் முராத் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இதையும் படிங்க: எனக்கு இது சரியா படல.. அவங்க தான் ஜெயிப்பாங்க.. வெற்றியாளர் பற்றி மைக்கேல் அதர்டன் பேட்டி

அதை விட இந்த போட்டியில் எடுத்த 17 ரன்களையும் சேர்த்து ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்கள் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற மாபெரும் சாதனையை சோயப் மாலிக் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. கிறிஸ் கெயில் : 14562
2. சோயப் மாலிக் : 13010
3. கைரம் பொல்லார்ட் : 12454
4. விராட் கோலி : 11994
5. அலெக்ஸ் ஹேல்ஸ் : 11807

Advertisement