அது கடவுள் ஆடிய இன்னிங்ஸ், அந்த ரெக்கார்டை உடைக்க 2023 உலக கோப்பையுடன் ரிட்டையராகிடுங்க – கிங் கோலிக்கு அக்தர் கோரிக்கை

Akhtar
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் விராட் கோலி 2023 ஆகஸ்ட் 18ஆம் தேதி தன்னுடைய சர்வதேச கேரியரில் 15 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்தார். டெல்லியைச் சேர்ந்த அவர் கடந்த 2008 அண்டர்-19 உலகக்கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடித்து நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் விடைபெற்ற 2013க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வரும் அவர் 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களையும் அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நவீன கிரிக்கெட்டின் நாயகனாக செயல்பட்டு வருகிறார்.

Virat Kohli MS Dhoni

- Advertisement -

அதே போல கேப்டனாகவும் உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வெற்றிகரமாக செயல்பட்ட அவர் டெஸ்ட் போட்டிகளில் 2016 – 2021 வரை உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியாவை ஜொலிக்க வைத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகள் பெற்றுக் கொடுத்தார். அப்படி ஆரம்ப காலங்களிலிருந்தே மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்த அவர் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.

அக்தரின் கோரிக்கை:
அப்போது நிறைய முன்னாள் வீரர்கள் அணியிலிருந்து நீக்குமாறு சொன்னாலும் மனம் தளராமல் போராடிய அவர் 2022 ஆசிய கோப்பையில் சதமடித்து தற்போது 3 வகையான கிரிக்கெட்டில் 3 இலக்க ரன்களை தொட்டு முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதிலும் 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 160 ரன்களை சேசிங் செய்கையில் 31/4 என சரிந்த இந்தியாவை மகத்தான இன்னிங்ஸ் விளையாடி தூக்கி நிறுத்திய அவர் 82* ரன்கள் குவித்து காலத்திற்கும் மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்து தாம் இன்னும் முடிந்துவிடவில்லை என்பதையும் சாம்பியன் வீரர் என்பதையும் நிரூபித்து விமர்சனங்களை அடித்து நொறுக்கினார்.

இந்நிலையில் அன்றைய நாளில் விராட் கோலி என்பவர் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கடவுள் தான் அப்படி ஒரு இன்னிங்ஸ் விளையாட உதவியதாக சோயப் அக்தர் பாராட்டியுள்ளார். மேலும் தற்போது 75 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி 2023 உலகக்கோப்பைக்கு பின் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்று தமக்கு மிகவும் பிடித்த டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி சச்சினின் 100 சதங்கள் சாதனையை உடைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த போட்டி அனைத்தும் விராட் கோலியை பற்றியது. கிரிக்கெட்டின் கடவுள் தான் அவர் அவ்வாறு விளையாடுவதை விரும்பினார். ஏனெனில் அந்த சமயத்தில் நல்ல ஃபார்மில் இல்லாததால் அவர் இந்தியாவின் ஊடகங்களுக்கு மத்தியில் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தார். அப்போது இது உனக்கான மேடை மீண்டும் வந்து ராஜாவாகுங்கள் என்று கடவுள் அவரிடம் சொன்னது போல் அந்த இன்னிங்ஸ் இருந்தது. 1.3 பில்லியன் இந்தியர்களும் 30 கோடி பாகிஸ்தானியர்களும் பார்த்த அந்த போட்டி விராட் கோலிக்காக அமைக்கப்பட்ட மேடை என்றே சொல்லலாம்”

“அவை அனைத்தையும் விட ஹரிஸ் ரவூப்க்கு எதிராக அடித்த சிக்ஸர் மீண்டும் அவருக்கு இழந்த ராஜாங்கத்தை பெற்றுக் கொடுத்தது. மொத்தத்தில் மெல்போர்ன் நகரில் அன்று அவருக்கு எல்லாமே விதிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். மேலும் இந்த உலகக் கோப்பைக்கு பின் அவர் ஒருநாள் போட்டியில் விளையாட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ஏற்கனவே டி20 போட்டிகள் அவரிடம் நிறைய சக்தியை உறிஞ்சுகின்றன. இந்த நிலைமையில் அவர் இன்னும் 6 வருடங்களாவது விளையாடி சச்சின் 100 சதங்கள் சாதனையை உடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்”

இதையும் படிங்க:நம்மகிட்ட நம்பர் 4 இடத்துக்கு ஆள் இல்லைன்னு யார் சொன்னது? இந்தாங்க லிஸ்ட் – குழப்பங்களை தீர்த்த கங்குலி

“எனவே உலகக் கோப்பைக்கு பின் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி அந்த சாதனையை உடைக்க வேண்டும். மேலும் அவர் கேப்டன்ஷிப் இழந்ததை பற்றி அனைவரும் நிறைய பேசுகிறார்கள். உண்மையில் அதுவே அவருக்கு கேப்டன்ஷிப் அழுத்தத்திலிருந்து சுதந்திரத்தை கொடுத்தது. கிரிக்கெட்டை சச்சின் போல விளையாட துவங்கிய அவர் தற்போது சச்சின் போல் அதிக ரன்கள் அடித்து வருகிறார். இதே போல அவர் தொடர்ந்து விளையாடி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement