அங்க தொட்டு, இங்க தொட்டு கடைசில இந்திய அணியின் முக்கிய பதவிக்கு ஆசைப்படும் அக்தர் – விவரம் இதோ

Akhtar
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் அவ்வப்போது கிரிக்கெட் குறித்த தனது கருத்துக்களையும், பல்வேறு விமர்சனங்களையும் தனது யூடியூப் சேனல் மூலமாக தெரிவித்து வருகிறார், அவருக்கு இதன் மூலம் எதிர்மறையான கருத்துக்கள் பல இருந்தாலும் தொடர்ந்து அவர் தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

Akhtar

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர் தனது காலத்தில் பேட்ஸ்மேன்களை தனது அதிவேக பந்து வீச்சின் மூலம் மிரட்டியவர். தனது ஓய்வுக்கு பிறகு யூடியூப் சேனல் மூலம் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு விமர்சனங்களை பெற்று வந்தாலும் அவரின் ஒரு சில கருத்துக்கள் ரசிகர்களால் வரவேற்கப்படுகின்றன.

அந்த வகையில் தற்போது ஹலோ ஆப் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அக்தர் இந்திய அணி குறித்தும், அவரது ஆசைக்குறித்தும் அளித்த பேட்டியில் இந்திய அணியில் அவர் வேலை செய்வது குறித்து சில விடயங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : இந்திய கிரிக்கெட் அணியின் பௌலிங் கோச் ஆக வாய்ப்பு அளிக்கப் பட்டால் அதனை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்.

Akhtar

மேலும் இந்திய அணியில் தற்போது உள்ள வேகப்பந்து வீச்சாளர்களை மேலும் சிறப்பான வீரர்களாக மாற்றுவேன். தவிர ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கோச் ஆகவும் எனக்கு விருப்பம் உள்ளதாக அவர் கூறினார். இந்திய அணி வீரர்கள் பொதுவாகவே சிறப்பாக செயல்படும் திறன் உடையவர்கள் என்பதால் அவர்களை பயிற்றுவிக்கும் போது அவர்களை இன்னும் மேம்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்தியாவில் கடந்த 1998ல் சச்சினுடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவருடன் பழகியதில் இருந்து அவருக்கு இந்திய ரசிகர்களிடம் இருக்கும் புகழ் குறித்து தனக்கு தெரிய வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் அவரை ரசிகர்கள் கடவுளாக மதித்ததை கண்டு மிரண்டு போனதாக குறிப்பிட்டுள்ளார். அதே ஆண்டில் இந்தியாவில் தான் பவுலிங் செய்த போது தனக்கும் அதிகமான ரசிகர்கள் உண்டானார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

akhtar 4

இதன் மூலம் அக்தருக்கு இந்திய அணியின் பௌலிங் கோச் பணி செய்வதற்கான ஆசை இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஏற்கனவே இந்திய அணி வீரர்கள் குறித்து புகழ்ந்து பேசும் அவர் தற்போது இந்திய அணிக்கு பயிற்சியாளராகவும் திட்டம் தீட்டுகிறார் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

Advertisement