என் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட்டால் இவரே ஹீரோவாக நடிக்க வேண்டும் – அக்தர் விருப்பம்

Akhtar
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் ஒரு காலத்தில் அதிவேகப் பந்து வீச்சில் அசத்தி வந்தார். அந்தக் காலத்தில் இருந்த பல சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் இடையே ஒரு புயல் வேகப் பந்துவீச்சாளர் ஆக தனது சிறப்பான பந்துவீச்சை தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளார். பெரும்பாலான நேரங்களில் ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ மற்றும் அக்தர் ஆகியோருக்கு இடையே அதிவேகமாக பந்து வீசுவது யார் என்ற போட்டி இருக்கும்.

Akhtar

- Advertisement -

ஆனாலும் அதிகமாக இந்தப்போட்டியில் வேகமாக பந்து வீசி அந்த சாதனையை அக்தரே மிகவேகமாக பந்துவீசியவர் என்ற சாதனையை தக்க வைப்பார். அதுமட்டுமின்றி பாகிஸ்தான் அணிக்காக 224 போட்டிகளில் பங்கேற்றுள்ள 444 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். கடந்த 2003ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் தன்னுடைய அதிவேகப் பந்து வீச்சை பதிவு செய்தார்.

இன்றளவும் அவர் வீசிய அந்த பந்து உலகின் மிக அதிவேகமாக வீசப்பட்ட பந்து என்ற சாதனையை வைத்துள்ளது. மேலும் அந்த சாதனை இதுவரை கிரிக்கெட் போட்டியில் முறியடிக்க படாமலேயே இருந்து வருகிறது. அக்தர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தற்போது போட்டிகளுக்கு வர்ணனை செய்வது மற்றும் கிரிக்கெட் போட்டிகள் குறித்து விமர்சனம் செய்வது என தொடர்ந்து கிரிக்கெட் குறித்த வேலைகளையே செய்து வருகிறார்.

Akhtar

மேலும் பாகிஸ்தானில் தனக்கு என பிரத்யேகமாக ஒரு யூடியூப் சேனல் ஒன்றை வைத்திருக்கும் அக்தர் அதில் ஏகப்பட்ட கிரிக்கெட் விடயங்களை பகிர்ந்து வருகிறார். மேலும் அதுமட்டுமின்றி கிரிக்கெட் குறித்த தந்து அனுபவத்தையும் அவர் குறிப்பிட்டு வருவதால் அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும்.அந்த வகையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பினால் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானிலும் இந்த பாதிப்பு நிலவுவதால் அங்கும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக ஹலோ ஆப் மூலமாக ரசிகர்களுடன் அக்தர் கலந்துரையாடினார். அந்த கலந்துரையாடலின் போது அவரிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அவை அனைத்திற்கும் பதில் அளித்த அத்தர் குறிப்பிட்ட ஒரு கேள்வியாக உங்களுடைய சுயசரிதை படத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கும் பதிலளித்தார்.

Salman

அதற்கு பதில் அளித்த அக்தர் : என்னுடைய சுய சரிதை படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் தான் இருப்பார். அவரே என்னுடைய சுயசரிதை படத்தில் நடிக்க வேண்டும் அதுவே எனது விருப்பமும் மேலும் அப்படி அமையுமானால் அதுவே என் கனவு திட்டம் என்று அக்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement