கோலியின் மோசமான பார்ம்க்கு அவர் கல்யாணம் பண்ணது தான் காரணம் – உளறிய முன்னாள் பாக் வீரர்

kohli
- Advertisement -

இந்திய அணியின் ஒட்டுமொத்த கேப்டன் பதவியில் இருந்தும் மொத்தமாக விலகியுள்ள விராட் கோலி தற்போது இந்திய அணியில் ஒரு சாதாரண வீரராக விளையாடி வருகிறார். கடந்த 2014 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் செய்து வந்த அவர் கடந்த 2017க்குப் பின் 3 வகையான இந்திய கிரிக்கெட்டின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். அவர் தலைமையில் சாதாரண போட்டிகளில் இந்தியா அபாரமாக செயல்பட்ட போதிலும் கேப்டனாக அவரால் ஒரு ஐசிசி உலகக் கோப்பையை கூட வெல்ல முடியவில்லை.

Kohli

- Advertisement -

பார்ம் அவுட்:
நவீன கிரிக்கெட்டில் ரன் மெஷினாக இருந்து வரும் அவர் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டன்ஷிப் செய்து வந்தார். அதன் காரணமாக கடந்த 2019க்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வரும் விராட் கோலி தற்போது வரை முழு பழைய பார்ம்மை இன்னும் எட்டவில்லை. கேப்டன்ஷிப் பணிச்சுமை தமது பேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்துவதை உணர்ந்த அவர் முதலில் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக அதன் பின் அவரின் ஒருநாள் கேப்டன் பதவியை பிசிசிஐ நீக்கியது.

இதனால் விரக்தி அடைந்ததன் காரணமாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக இருந்த போதிலும் அந்த பதவியையும் விராட் கோலி ராஜினாமா செய்துள்ளார் என பலரும் கருதுகிறார்கள்.

Kohli-1

வலுக்கட்டாயமாக நீக்கம்:
இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியது மற்றும் அவரின் மோசமான பார்ம் பற்றி பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் இன்று அளித்துள்ள ஒரு பேட்டியில்,

- Advertisement -

“விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலக வில்லை, வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டார். அவர் கடந்த 6 – 7 வருடங்களாக கேப்டன்ஷிப் செய்து வருகிறார். ஆனால் அவரின் கேப்டன்ஷிப்புக்கு எனது ஆதரவு எப்போதும் இல்லை. அவர் எப்போதும் 100 – 120 ரன்கள் அடிப்பதையே நான் விரும்புகிறேன்” என கூறியுள்ள அக்தர் விராட் கோலி கேப்டனாக செயல்படுவதை விட சாதாரண வீரராக செயல்படுவதையே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Kohli-2

கல்யாணமே காரணம்:
“அவரின் இடத்தில் நான் இருந்திருந்தால் கல்யாணமே செய்திருக்கமாட்டேன். நான் ரன்கள் விளாசி கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடி இருப்பேன். ஏனெனில் இந்த 10 – 12 வருடங்கள் மிகவும் முக்கியமானதாகவும், இது போனால் திரும்பாது. கல்யாணம் செய்வது தவறு என நான் கூறவில்லை ஆனால் இந்தியாவுக்காக விளையாடும் போது நீங்கள் சற்று அதிகமாக மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும். கேப்டனாக நீங்கள் அதிகம் யோசிக்க வேண்டியிருக்கும், அதற்காக நான் திருமணத்திற்கு எதிராகப் பேசவில்லை.

இதையும் படிங்க : அண்டர் 19 உலககோப்பையில் சரித்திர சாதனையை நிகழ்த்திய இளம்வீரர் – விவரம் இதோ

ஆனால் நீங்கள் நாட்டுக்காக எவ்வித பிரஷரும் இல்லாமல் விளையாடவேண்டும். நான் ஓய்வு பெற்ற பின்புதான் திருமணம் செய்து கொண்டேன். மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கும் போது அவர்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளதால் அழுத்தம் ஏற்படும்” என இதுபற்றி மேலும் தெரிவித்த சோயப் அக்தர் சமீப காலங்களாக விராட் கோலி பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமல் திணற அவர் திருமணம் செய்து கொண்டது ஒரு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement