வாசிம் அக்ரம் என்கிட்ட இந்த வார்த்தை மட்டும் கேட்டிருந்தால் அவரை கொலை செய்து இருப்பேன் – அக்தர் டாக்

- Advertisement -

கிரிக்கெட் விளையாட்டில் மேட்ச் பிக்ஸிங் என்கிற சூதாட்டம் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் நிறைய பேர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் பத்தாண்டுகளுக்கு முன்பாகவும் சரி, தற்போது வரையிலும் சரி ஏகப்பட்ட வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தின் காரணமாக விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர். இதில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த வீரர்கள் பல பேர் சூதாட்டத்தில் சிக்கி கிரிக்கெட் வாழ்க்கையை தொலைத்து இருக்கின்றனர் என்பது உண்மையே.

Pak-1

- Advertisement -

குறிப்பாக இளம் இளம் வீரர்களை தங்களது வலையில் விழ வைக்கும் சூதாட்ட தரகர்கள் அவர்களின் மூலம் போட்டி முடிவுகளை மாற்றுவதற்காக பணம் கொடுத்து தங்கள் வழி இழுகின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் சூதாட்டப் புகாரில் சிக்கி இருந்தாலும் இதில் பாகிஸ்தானியர்கள் அதிகம் என்று கூறலாம். மேலும் அவர்கள் நாட்டு கிரிக்கெட் போர்டும் சம்பள தொகையை குறைவாக தருவதால் பணத்திற்கு ஆசைப்பட்டு வீரர்கள் இதுபோன்ற சூதாட்டத்தில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூட பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டனான சாஹிப் அல் ஹசன் சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகியதை மறைத்ததன் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து ஓராண்டு தடை செய்யப்பட்டார். அந்த அளவிற்கு சூதாட்ட தரகர்கள் கிரிக்கெட் வீரர்களை நேரடியாக அணுகி சூதாட்டத்தில் ஈடுபட கேட்டுக் கொள்கின்றனர். ஆனால் அதற்கு ஒத்துழைப்பு பல வீரர்களிடமிருந்து கிடைப்பதில்லை. ஆனால் சில வீரர்களை குறிவைக்கும் இந்த சூதாட்டக்காரர்கள் பணத்தின் ஆசையை காண்பித்து அவர்களை தங்கள் வலையில் விழு வைக்கின்றனர்.

Pak

இந்நிலையில் பாகிஸ்தானில் அதிகரிக்கும் சூதாட்ட பிரச்சனை காரணமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் விளையாடிய காலத்தில் என்னை மேட்ச் பிக்சிங் செய்ய அழைத்து இருந்தால் நான் என்னை அழைப்பவர்களை கொன்று இருப்பேன் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான அக்தர் கூறியுள்ளார்.

- Advertisement -

பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 173 ஒருநாள் போட்டிக,ள் 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவம் வாய்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இவர் வாசீம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற தலைசிறந்த பந்து வீச்சாளர் உடன் இளம் பந்துவீச்சாளராக பாகிஸ்தான் அணியில் ஏழு எட்டு வருடம் பந்து வீசியுள்ளார். இந்நிலையில் தன்னை மட்டும் மேட்ச் பிக்ஸிங் செய்ய சொல்லியிருந்தால் என்னை அழைப்பவரை கொன்று இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Akhtar

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் 1990களில் வாசிம் அக்ரம் பவுலிங் ஈர்க்கப்பட்டேன் அவரது திறமையான பந்து வீச்சினால் விக்கெட்டுகளை வீழ்த்துவார்.அவருடன் ஏழு எட்டு வருடம் விளையாடியதில் ஓப்பனிங் வீரர்களை அவர் வீழ்த்துவதும் பின்னால் உள்ளவர்களை நான் வீழ்த்துவதும் என்று எங்களது கிரிக்கெட் சிறப்பாக சென்று கொண்டிருந்தது.

அப்போது ஒருமுறை நான் நேரடியாக வசிம் அக்ரமிடம் சென்று என்னை மட்டும் மேட்ச் பிக்சிங் செய்யும்படி சொல்லி இருந்தால் உங்களை கொன்றுவிடுவேன் என்று கூறினேன். ஆனால் அவர் அது போல என்னிடம் கேட்டதே கிடையாது என் விருப்பத்திற்கு பந்துவீசிய மட்டுமே அனுமதி அளிப்பார். இருப்பினும் நாங்கள் விளையாடிய காலத்திலும் சூதாட்டம் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement