கோலிதான் சிறந்த கேப்டன். அதனை அடித்து கூற இந்த காரணங்கள் போதும் – சோயிப் அக்தர் பேட்டி

Akhtar

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக விராட்கோலி 254 ரன்கள் எடுத்தது பெரிய உத்வேகமாக அமைந்தது.

Kohli

மேலும் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 11 ஆவது டெஸ்ட் தொடரை இந்திய மண்ணில் தொடர்ச்சியாக கைப்பற்றி சாதனை படைத்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் யூடியூப் சேனல் போன்று ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : விராட் கோலி ஒரு மிகச் சிறந்த கேப்டன் ஏனெனில் உலக கோப்பைக்கு பிறகு அவரது தவறுகளை அவர் திருத்திக் கொண்டு அதிலிருந்து நல்ல பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளார்.

மேலும் இந்திய அணியின் பலத்தை அதிகப்படுத்த அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு வகைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு முன்னர் இருந்த காலங்களில் இந்திய அணியின் கேப்டன்கள் பலத்தை அவ்வளவாக அவர்கள் சோதித்துப் பார்த்தது இல்லை. இந்நிலையில் விராட் கோலி இந்திய அணியின் பலத்தை பரிசோதித்து மற்றவர்களிடமிருந்து இந்திய அணியை பலப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Ind

மேலும் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி தற்போது 11 தொடர் வெற்றிகளை குவித்து தங்களது பலத்தை நிரூபித்துள்ளது. எனவே இந்திய அணியின் கேப்டன் கோலி இருக்கும்வரை டெஸ்ட் தொடர்களில் சாம்பியன்ஷிப் போட்டிகளை கணிக்கும் வகையில் இப்போதுள்ள கேப்டன்களில் சிறந்தவர் கோலிதான் என்று சோயிப் அக்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -