இவரால் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் சிறப்பாக பந்துவீச முடியாது. கூடிய சீக்கிரம் காணாமல் போயிடுவார் – அக்தர் சர்ச்சை பேட்டி

Akhtar

ஷோயப் அக்தர் சும்மாவே இருக்க மாட்டார் போலிருக்கிறது. எப்போது பார்த்தாலும் யாரையாவது ஒருவரை குறை சொல்வது இல்லை என்றால். தன்னுடன் தற்போது இருக்கும் மிகச் சிறந்த வீரர்களை ஒப்பிட்டு பேசிக் கொள்வது என்பதை வாடிக்கையாகவே வைத்து இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் என அனைவரையும் பற்றியும் பேசி வருகிறார்.

Akhtar

வெகுஜன மக்களின் பார்வையை தன் பக்கம் வைத்துக் கொண்டிருக்கிறார். ஏனெனில் அவர் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். தற்போது தன்னுடைய யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார் . அந்த வீடியோவில் தற்கால மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை பற்றி பேசியுள்ளார் . அதாவது அவர் கூறுகையில்…

ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். தற்கால வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அவர் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் மாறி வருகிறார். ஆனால் இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சர் அப்படியில்லை. அவரால் தொடர்ச்சியாக 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்தை வீச முடியவில்லை.

கடந்த டெஸ்ட் போட்டியில் வேகமாக வீசினார், ஆனால் தற்போது அவரது வேகம் குறைந்துவிட்டது. அவர் இப்படியே சென்று விடுவார். அவரிடம் சரக்கு ஏதும் இல்லை போலிருக்கிறது. அதேபோல் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் நீண்டகாலம் பந்து வீச முடியாது என்று நினைக்கிறேன்.

- Advertisement -

Archer 1

அவருக்கும் டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு சிரமம் இருக்கிறது மூன்றுவிதமான போட்டிகளிலும் அவரால் ஆடுவது சிரமம் இப்படியே ஜோப்ரா ஆர்ச்சர் தனது வேகத்தை குறைத்தால் டெஸ்ட் போட்டிகளை அவர் மறந்துவிட வேண்டியதுதான் என்ற விமர்சனம் செய்துள்ளார் சோயிப் அக்தர்.