MS Dhoni : தோனி மீது விமர்சனங்கள் வரும். ஓய்வை அறிவிக்கும் நேரமும் வரும் – சோயிப் அக்தர்

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை

dhonii
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி நான்கு வெற்றிகளையும், நியூசிலாந்துடனான மழையால் நின்ற போட்டியில் ஒரு டிரா என 9 புள்ளிகளில் உள்ளது.

india

- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக 27ஆம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் தோனி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் தோனி 52 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார் இந்த ஆட்டம் மோசமான ஆட்டங்களில் ஒன்றாக பலரும் கூறி வருகின்றனர். இதனை அடுத்து தோனிக்கு சச்சினும் கருத்து தெரிவித்திருந்தார். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பலம் முழுவதும் கோலியிடம் உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. கோலி நன்றாக ஆடவில்லை என்றால் மிடில் ஆர்டரில் இந்திய அணி இவ்வாறுதான் ஆடும் என்பதை ஆப்கானிஸ்தான் எதிரான போட்டி காண்பித்து விட்டது.

Dhoni 1

மேலும் தோனி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடிய விதம் அனைவரையும் கவனத்தையும் அவரின் ஓய்வு மீது திருப்பியுள்ளது. எனவே ரசிகர்கள் அவரை ஓய்வு பெற விமர்சனங்கள் வைப்பார்கள். மேலும் தொடர்ந்து இதுபோன்று மெதுவாக ஆட்டத்தை தோனி வெளிப்படுத்தினால் அவர் மீது விமர்சனங்கள் அதிக அளவில் வரும் இதன்காரணமாக ஓய்வுக்கான அழுத்தத்தையும் அதிக அளவு ரசிகர்கள் தோனிக்கு தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்று அக்தர் கூறினார்.

Advertisement