யாருமே என்கிட்ட வந்து கேக்கமாட்றாங்க. பாகிஸ்தான் வீரர்களை தாக்கி பேசிய – சோயிப் அக்தர்

Akhtar
- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது பவுலிங்கை சரிவர பயன்படுத்தவில்லை. ஒரு காலத்தில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்த ஒரு அணியாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் தற்போது பந்துவீச்சில் சற்று தடுமாறி வருவது அனைவரையும் வருத்தப்பட வைத்துள்ளது.

engvspak

- Advertisement -

இந்நிலையில் எந்தவொரு பாகிஸ்தான் பாஸ்ட் பவுலரும் தன்னிடம் வந்து பந்துவீச்சு குறித்த ஆலோசனைகளை கேட்ப்பதில்லை என அக்தர் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கூட என்னிடம் சில ஆலோசனைகளை கேட்டிருக்கின்றனர். ஆனால் பாகிஸ்தான் அணியிலிருந்து ஒருவர் கூட என்னிடம் வந்து ஆலோசனைகளை கேட்டதில்லை.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஆடிய போது கூட இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான சாகிப் மஹமூத் என்னிடம் வந்து தனது வேகப்பந்து வீச்சை மேம்படுத்த பல ஆலோசனைகளை பெற்றார். மேலும் அவருடைய பந்துவீச்சில் போதிய வேகம் கிடைக்கவில்லை என்று என்னிடம் அதைப் பற்றி கேட்டறிந்து கொண்டார்.

mahmood

அப்போது நான் அவருக்கு கால் மற்றும் தோள்பட்டை பகுதிகளில் சற்று பலம் இருந்தால் உங்களது பந்துவீச்சில் வேகம் இருக்கும் என்று கூறினேன். அதன்படி தற்போது கால் மற்றும் தோள்பட்டை ஆகிய பகுதிகளில் சதை பிடித்து உள்ளதால் தற்போது அவருக்கு வேகம் அதிகரித்துள்ளது. அவரைப் போன்று பாகிஸ்தான் அணியில் உள்ள எந்த பவுலரும் என்னிடம் வந்து ஆலோசனை கேட்டதில்லை என்று தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போதுள்ள பாகிஸ்தான் அணியில் ஹசன் அலி, ஷாகின் அப்ரிடி, பாகிம், நசீம் ஷா போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தும் அவர்களது சிறப்பான பந்துவீச்சை எவரும் வெளிப்படுத்தாததால் அந்த அதிர்ச்சியில் அக்தர் தற்போது பாகிஸ்தான் பவுலர்களை கடிந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement