- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாகிஸ்தான் மட்டுமல்ல இந்தியாவும் படு மோசமாக தான் விளையாடியது – மீண்டும் வம்பிழுத்த பாக் வீரர்

ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஆசிய கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் தற்போது இந்த ஆசிய கோப்பை தொடரானது 20 ஓவர் போட்டியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கிய இந்து தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முக்கியமான லீக் போட்டி கடந்த 28-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை போட்டியின் போது ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இம்முறை இந்திய அணியானது பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டம் இழக்க அதனை தொடர்ந்து 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது கடைசி ஓவரில் இரண்டு பந்துகளை மீதம் வைத்திருந்த வேளையில் வெற்றி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளுமே படு மோசமாக விளையாடியதாக பாகிஸ்தான அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இரு அணிகளுமே படு மட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 2 அணிகளுமே ஜெயிப்பதற்காக ஆடவில்லை தோற்ப்பதற்காக தான் ஆடினர்.

- Advertisement -

இரு அணியின் கேப்டன்களுமே பல்வேறு வித்தியாசமான முடிவை எடுத்தது தனக்கு ஆச்சரியமாக இருந்ததாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா ரிஷப் பண்ட்டை ஏன் அணியிலிருந்து நீக்கினார் என்று தெரியவில்லை. அதேபோன்று பாபர் அசாமும் இப்திகார் அகமதை ஏன் நான்காவது இடத்தில் களமிறக்கினார் என்றும் புரியவில்லை. மேலும் இந்தியா பேட்டிங் செய்யும்போது சூர்யகுமார் யாதாவிற்கு முன்னதாக ஜடேஜா களமிறக்கி விடப்பட்டது குறித்தும் எனக்கு சரியான தெளிவு கிடைக்கவில்லை.

இதையும் படிங்க : சூரியகுமார் யாதாவிற்கு முன்னாள் ஜடேஜா 4 ஆவது வீரராக களமிறங்க என்ன காரணம் – விவரம் இதோ

இப்படி பல தவறுகளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளுமே செய்தது. இப்படி ஒட்டுமொத்தமாக இரு அணிகளுமே தோல்விக்காக தான் விளையாடினர் என்றும் அவர்களது மோசமான போட்டி இதுதான் எனவும் சோயிப் அக்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by