சூரியகுமார் யாதாவிற்கு முன்னாள் ஜடேஜா 4 ஆவது வீரராக களமிறங்க என்ன காரணம் – விவரம் இதோ

Sky-1
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குக்கு மத்தியில் ஆசிய கோப்பை தொடரின் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த 28-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணியானது இந்த தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

Ravindra Jadeja Hardik Pandya

- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை போட்டியின் போது இந்திய அணியை பாகிஸ்தான அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்ததால் இந்த போட்டியில் அவர்களை வீழ்த்தி இந்திய அணி தங்களது பலத்தை நிரூபிக்க காத்திருந்தது. அதன்படி துபாயில் நடைபெற்ற இந்த ஆசிய கோப்பை தொடரின் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹார்டிக் பாண்டியா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோரது விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தாலும் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக போட்டியில் முன்னிலை பெற்றது.

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan

இறுதி வேளையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 33 ரன்களை விளாசி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் இந்த போட்டியின் போது நான்காவது வீரராக சூரியகுமார் யாதவுக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா களமிறங்கியது அனைவரது மத்தியிலும் கேள்விகளை எழுப்பியது.

- Advertisement -

இந்நிலையில் அவரது இந்த முன்னேற்றம் குறித்து பேசிய ஜடேஜா கூறுகையில் : இந்த போட்டியின் போது இடது கை ஸ்பின்னர்கள் மற்றும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் ஆகியோர் அந்த மிடில் ஓவர்களில் பந்து வீச இருந்ததால் இடது கை பேட்ஸ்மேனான என்னை உள்ளே அனுப்பினர். அணியில் உள்ள டாப் 7 வீரர்களில் தற்போது நான் மட்டுமே இடதுகை வீரர் என்பதனால் இந்த பிரமோஷன் கிடைத்தது.

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை : ரிஷப் பண்ட் ஏன் சேர்க்கப்படவில்லை. சாமர்த்தியமான பதிலளித்த – ரவீந்திர ஜடேஜா

அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள நான் தயாராக இருந்தேன். நல்லவேளை எனது இந்த இன்னிங்ஸ் சிறப்பான ஒன்றாக அமைந்துவிட்டது என ஜடேஜா கூறினார். இந்த போட்டியில் கோலிக்கு அடுத்து ஜடேஜாவும் 35 ரன்கள் குவிக்கவே இந்திய அணி வெற்றிக்கு மிக அருகில் சென்று இறுதியில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement