- Advertisement -
ஐ.பி.எல்

சமாதானமா போங்க.. கவாஸ்கர் பற்றி விராட் கோலி அப்படி சொல்லிருக்கக் கூடாது.. வாசிம் அக்ரம் கருத்து

ஐபிஎல் 2024 தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து பெங்களூரு அணியின் வெற்றிகளுக்காக போராடி வருகிறார். அதன் காரணமாக அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அவர் ஆரஞ்சு தொப்பியையும் தன் வசம் வைத்துள்ளார். இருப்பினும் அந்த ரன்களை விராட் கோலி கொஞ்சம் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதனால் விராட் கோலி தான் பெங்களூரு கிரிக்கெட் அணியின் தோல்விகளுக்கு காரணம் என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அந்த சூழ்நிலையில் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் அவர் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்புறம் சில விக்கெட்டுகள் விழுந்ததும் மெதுவாக விளையாடிய விராட் கோலி கடைசியில் 51 (43) ரன்களை 118 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டானார்.

- Advertisement -

சொல்லிருக்கக் கூடாது:
அப்போது “14 – 15 ஓவர்கள் வரை நன்கு செட்டிலாகி விளையாடி விட்டு கடைசியில் 118 ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டாகும் ஆட்டத்தை யாருமே எதிர்பார்க்க மாட்டார்கள்” என்று விராட் கோலியை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நேரலையில் விமர்சித்தார். அதே போல மேலும் சிலர் முன்னாள் வீரர்கள் விராட் கோலியை பற்றி விமர்சித்தார்கள். அதற்கு மற்றொரு போட்டியின் முடிவில் “தாம் யாருக்காகவும் விளையாடவில்லை. அணிக்காகவும் ரசிகர்களுக்காகவும் மட்டுமே விளையாடுகிறேன்” என்று விராட் கோலி பதிலடி கொடுத்தார்.

அதனால் அதிருப்தியடைந்த சுனில் கவாஸ்கர் “விமர்சனங்களை பற்றி கவலைப்படுவதில்லை என்று சொல்லும் விராட் கோலி இப்படி பதிலடி கொடுத்தது ஏன்?” என்று மீண்டும் விமர்சித்தார். அத்துடன் “118 ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டாகி விட்டு பாராட்டுமாறு சொன்னால் அது வேடிக்கையானது” என்றும் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார். இந்நிலையில் இந்த விவாதத்தில் விராட் கோலி அப்படி சொல்லியிருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “அந்த இருவரும் மகத்தானவர்கள். கவாஸ்கர் பாய் ஒரு வீரராகவும் மனிதராகவும் நல்லவர். களத்திற்கு வெளியே அவரை நான் அறிவேன். ஒரு வர்ணனையாளராக எவ்வளவு காலம் அவர் செயல்பட்டு வருகிறார் என்பதை கடவுள் அறிவார். அதே போல விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் டாப் பிளேயர். சொல்லப்போனால் அவர் வரலாற்றின் ஆல் டைம் கிரேட் பிளேயர்”

இதையும் படிங்க: இது தெரியாம பேசுறீங்களே.. சிஎஸ்கே பி டீமை வெச்சு விளையாடுறோம்.. தோனி பற்றி வெளியான ரிப்போர்ட்

“ஆனால் விராட் கோலி அதை சொல்லியிருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் உங்களுடைய ஆட்டத்தை பற்றி பேசுவது வர்ணையாளர்களின் வேலையாகும். ஒருவேளை நீங்கள் போட்டிகளில் மெதுவாக விளையாடியதற்காக கவாஸ்கர் ஏதாவது சொல்லியிருந்தால் நீங்கள் அதை மறந்திட வேண்டும். இருவரும் மகத்தான இந்தியர்கள். இருவரும் அதிலிருந்து வேகமாக நகர வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -