டி20 போட்டிகளில் இப்படி ஒரு வீரர் இருக்கிறார் என்பதையே ஐ.சி.சி மறந்துவிட்டது – கடுமையாக விளாசிய அக்தர்

Akhtar
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கனவு அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. மேலும் சிறந்த ஒருநாள் வீரர், டெஸ்ட் வீரர், டி20 வீரர் மற்றும் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் என பல்வேறு வகையான பிரிவுகளுக்கும் தனித்தனி வீரர்களுக்கும் விருதினை வழங்கி கௌரவித்தது. இந்த மூன்று வகையான அணியிலும் ஒரு பாகிஸ்தான் வீரர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kohli 1

- Advertisement -

இந்நிலையில் இது குறித்து தனது காட்டமான கருத்தினை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் கூறுகையில் : ஐசிசி தற்போது ஐபிஎல் 11 கனவு அணியை மட்டுமே வெளியிட்டுள்ளது. விரைவில் அவர்கள் டி20 11 கனவு அணியை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்று நக்கலாக பேசியுள்ளார். ஏனெனில் ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

அதே போல் ஐசிசி பாகிஸ்தான் வீரர்களை ஐ.சி.சி புறக்கணித்து உள்ளதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருவது ஐசிசியின் கண்களுக்கு தெரியவில்லையா ?அப்படி ஏன் தெரியவில்லை ? ஐசிசி பாரபட்சத்தோடு செயல்படுவதாக எனக்கு தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

azam

ஏனெனில் தற்போதைய டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பாபர் அசாம் ஏகப்பட்ட அரை சதங்களை அடித்து விளாசியுள்ளார். என்னை பொறுத்தவரை ஐசிசியின் அணியின் கேப்டனாக அவர் இடம்பெறவில்லை என்றாலும் ஒரு பேட்ஸ்மேனாக அது அவருக்கு இடம் பிடித்திருக்க வேண்டும். ஆனால் ஐ.சி.சி கிரிக்கெட்டை முழுக்க முழுக்க பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்ற முயற்சிக்கிறது என ஐயம் கொள்கிறேன். அந்த அளவிற்கு அவர்களின் தேர்வு மோசமாக அமைந்துள்ளது என்று ஐ.சி.சி யை எதிர்த்து காட்டமாக தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஐ.சி.சி வெளியிட்டுள்ள கனவு டி20 அணி இதோ :

ரோஹித் ஷர்மா, கிறிஸ் கெய்ல், ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி, ஏபி டிவிலியர்ஸ், கிளென் மேக்ஸ்வெல், மகேந்திரசிங் தோனி (கேப்டன்), கெய்ரன் பொல்லார்ட், ரஷித் கான், ஜஸ்பரீத் பும்ரா, லஷித் மலிங்கா.

Advertisement