இந்திய அணியிலும் ஒரு இன்சமாம் உல் ஹக் இருக்காரு. இளம்வீரரை பாராட்டிய – சோயிப் அக்தர்

Akhtar
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் அவ்வப்போது இந்திய அணியை பற்றி புகழ்ந்து பேசுவதை தொடர் வாடிக்கையாக வைத்துள்ளார். இருப்பினும் அவர் கூறும் கருத்துகள் சரியாக இருப்பதனால் அதற்கான வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய அணியைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவரை பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்குடன் மக்கள் ஒப்பிட்டு பேசி வருவதாக அவர் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

Pak

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : தற்போது உள்ள எந்த ஒரு பாகிஸ்தான் ரசிகரும் இந்திய அணி சிறப்பான அணி இல்லை என்று கூறுவதில்லை. எல்லோரும் இந்திய அணியை வெளிப்படையாகவே ஆதரிக்கின்றனர். விராட் கோலி ஒரு கிரேட் பிளேயர் அவரைவிட ரோகித் சர்மாவும் தற்போது மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.

அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் இருக்கும் மக்கள் இந்தியாவின் இன்சமாம் உல் ஹக் என ரிஷப் பண்ட் பாராட்டி வருகின்றனர். ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது அவரது ஆட்டம் அப்படித்தான் இருந்தது. மிகச் சிறப்பாக விளையாடி வரும் அவர் இந்திய அணியின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறார். அதேபோன்று சூர்யகுமார் யாதவ் பாராட்டக்கூடிய ஒருவர் நிச்சயம் அவரும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என சோயப் அக்தர் கூறினார்.

pant 1

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான் பேசும் சில இந்திய அணிக்கு சாதகமான கருத்துக்களுக்கு பணத்திற்காக பேசுகிறேன் என்று கூறுகிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல இந்தியாவில் எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். நான் இந்தியாவை நேசிக்கும் ஒரு பாகிஸ்தானிய அதிர்ஷ்டசாலி அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது என்று தெளிவாக குறிப்பிட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பையில் புதிய உச்சம் தொட்ட ஷாகிப் அல் ஹசன். அப்ரிடியின் சாதனை முறியடிப்பு – விவரம் இதோ

இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை உலகமே எதிர் நோக்கி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடப்பு உலக கோப்பை தொடரில் நாளை மறுதினம் 24-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் இணையும் சூப்பர் 12-போட்டியில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement