டி20 உலகக்கோப்பையில் புதிய உச்சம் தொட்ட ஷாகிப் அல் ஹசன். அப்ரிடியின் சாதனை முறியடிப்பு – விவரம் இதோ

Shakib
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே டாப் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் மோத உள்ள நிலையில் தகுதி சுற்று போட்டிகள் தற்போது ஓமன் நாட்டில் நடைபெற்று வருகின்றன. இந்த தகுதிச்சுற்று போட்டிகளில் பங்களாதேஷ் அணி தற்போது இரண்டு வெற்றிகளை பெற்று சூப்பர் 12-ல் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் டி20 உலக கோப்பை தொடரில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ban

- Advertisement -

மேலும் உலக கோப்பை டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி வைத்திருந்த முக்கிய சாதனை ஒன்றினை அவர் பப்புவா நியூ கினியா நாட்டு அணிக்கு எதிரான போட்டியின் மூலம் முறியடித்துள்ளார். பங்களாதேஷ் அணிக்காக பல ஆண்டாக விளையாடி வரும் ஷாகிப் பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது நடைபெற்று முடிந்த ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சிலும் அசத்தினார்.

பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். இதுவரை டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி 39 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தார். இந்நிலையில் அவரது இந்த சாதனையை முறியடித்துள்ள ஷாகிப் 28 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 39 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

shakib 1

அதேவேளையில் அப்ரிடி 34 போட்டிகளில் 39 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் தற்போது பங்களாதேஷ் அணி சூப்பர் 12-ல் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த ஷாகிப் 28 பந்துகளை சந்தித்த அவர் 46 ரன்களை குவித்து அசத்தினார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆஸ்திரேலியா இல்ல. இந்த டி20 உலகக்கோப்பையை கைப்பற்றப்போவது இந்த அணிதான் – பிரெட் லீ கணிப்பு

இதன் மூலம் பங்களாதேஷ் அணி பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து 181 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் விளையாடிய பப்புவா நியூ கினியா அணி 97 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது மட்டுமின்றி பேட்டிங்கிலும் 46 ரன்கள் குவித்த ஷாகிப் அல் ஹசன் இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement