பாகிஸ்தான் வெற்றி பெறுவதே இப்படித்தான். நீங்கள் மொதல்ல வெளிய போங்க – பாபர் அசாமை சாடிய அக்தர்

Shoaib Akhtar
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வரும் டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெறும் வலுவான அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியானது முதல் போட்டியிலேயே இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்து இருந்தது. அதன் பின்னர் வலு விழுந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மிகப்பெரிய அளவில் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஜிம்பாப்வே அணியிடமும் ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பு தற்போது கடினமாகியுள்ளது.

Pakistan

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் அணி பெற்ற இந்த அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக பாகிஸ்தான அணியை அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒரு மோசமான கேப்டன் என்றும் அவர் பதவி விலக வேண்டும் எனவும் அந்த அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது youtube சேனலில் பேசுகையில் கூறியதாவது :

“உங்களைப் புரிந்து கொள்வது ஏன் கடினமாக இருக்கிறது” என்று எனக்கு தெரியவில்லை?. இதை நான் முன்கூட்டியே சொன்னேன். ஆனால் யாரும் கேட்கவில்லை நான் அதேதான் இப்போதும் சொல்கிறேன். பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமே டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் மூலம் தான். அதனை தவிர்த்து பாகிஸ்தான் அணியால் பெரிய அளவில் வெற்றியை பெற முடியவில்லை. நீங்கள் வழி நடத்தும் விதம் பாகிஸ்தான அணிக்கு ஏற்புடையதாக இல்லை. பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் ஒரு மோசமான கேப்டனாக இருக்கிறார் என்று சோயிப் அக்தர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் :

Babar-Azam

இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் பாபர் அசாம் எடுத்த ஒரு சில முடிவுகள் தான். கடைசியாக நாம் தோற்ற இரண்டு ஆட்டங்களிலும் முகமது நவாஸ் கடைசி ஓவர் வீசி இருக்கிறார். முதலில் நீங்கள் பேட்டை கீழே வையுங்கள். உங்களுக்கு கேப்டன்சி சரியில்லை. அதே போன்று அணியில் உள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடியின் தகுதியும் பெரிய அளவில் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை.

- Advertisement -

இது போன்ற சில குறைகளை வைத்துக்கொண்டு அணியை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு செல்வது தவறு. இதேபோன்று தொடர்ந்து செயல்பட்டால் நீங்கள் என்ன கிரிக்கெட்டை விளையாடுகிறீர்கள் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பாபர் அசாம் மீது சோயிப் அக்தர் வைத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியானது அடுத்ததாக நெதர்லாந்து, வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளில் விளையாட உள்ளது.

இதையும் படிங்க : மழை வருது பேசாம டி20 உ.கோ’யை துபாய்க்கு மாத்துங்க – படுமோசமான சாதனையால் பாகிஸ்தானை கலாய்க்கும் ரசிகர்கள்

இந்த மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி பெரிய வெற்றியைப் பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளின் முடிவை வைத்து தான் அடுத்த கட்டத்திற்கு பாகிஸ்தான் செல்லும் என்பதனால் தற்போது பாகிஸ்தான் அணி மீது பெரிய அளவில் விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement