டி20 உலகக்கோப்பை செமி பைனலுக்கு போகும் 4 அணிகள் இவைதான் – சோயிப் அக்தர் தேர்வு

Akhtar

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக் கோப்பை தொடர் ஆனது இங்கு பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்த தொடர் நடைபெறும் வேளையில் இந்த தொடரில் எந்த அணி வெற்றி பெறும் ? எந்த அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்பது குறித்த கணிப்புகளை முன்னாள் வீரர்கள், நிபுணர்கள், பிரபலங்கள் என பலரும் வெளியிட்டு வருகின்றனர்.

cup

2007ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்ற போது இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி இருமுறையும், பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளன.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றி இரண்டாவது முறை சாம்பியன் ஆகும் வாய்ப்பை எதிர்பார்த்து உள்ளது. இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகள் குறித்த கருத்துகளை பல்வேறு முன்னாள் வீரர்களும் தெரிவித்துவரும் வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான அக்தர் இந்த டி20 தொடரில் வித்தியாசமான நான் அணிகளை தேர்வு செய்து அந்த அணிகள் தான் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Pak

அவர் குறிப்பிட்டுள்ள அந்த கருத்தில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்று தேர்வு செய்துள்ளார். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளை தேர்வு செய்யாமல் ஆப்கானிஸ்தான் அணியை அக்தர் தேர்வு செய்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement