இந்த ஒரு விஷயத்துக்காக நான் தினேஷ் கார்த்திக்கை பாராட்டியே ஆகனும் – சோயிப் அக்தர் வெளிப்படை

Akhtar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியிருந்தார். அதன் பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அணியில் இடம் பிடிக்காமல் இருந்து வருகிறார். இத்துடன் அவரது கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடருக்கு முன்னர் பேசிய தினேஷ் கார்த்தி கூறுகையில் :

Karthik-2

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் நான் நிச்சயம் சிறப்பாக விளையாடுவேன். என்னுடைய கிரிக்கெட் இன்னும் முடியவில்லை. இந்தியாவுக்காக குறைந்தது 2 டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும். மேலும் இந்திய அணியில் பங்கேற்பது மட்டுமின்றி இந்திய அணிக்காக கோப்பையையும் கைப்பற்றி தர வேண்டும் என்பது மட்டுமே எனது இலக்கு என்று கூறிய தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக தற்போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த தொடரில் ஆர்சிபி அணிக்கு பினிஷர் ரோலில் களமிறங்கி வரும் தினேஷ் கார்த்திக் 15 போட்டிகளில் விளையாடி 187 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 324 ரன்களை குவித்துள்ளார். அதோடு இம்முறை பெங்களூரு அணி தற்போது பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது மட்டுமின்றி இரண்டாவது குவாலிபயர் போட்டியிலும் விளையாட இருக்கிறது. இப்படி இவ்வளவு தூரம் பெங்களூரு அணி வர தினேஷ் கார்த்திக்கின் பங்கும் ஒருபுறம் உண்டு என்றால் அது மிகையல்ல.

karthik

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் அடுத்ததாக நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். அவரது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டம் காரணமாகவே இந்திய அணிக்காக அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக் குறித்து பாராட்டி பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் கூறுகையில் :

- Advertisement -

எப்போதுமே நான் ஒரு வீரரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச விரும்ப மாட்டேன். ஆனால் தினேஷ் கார்த்திக் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய கஷ்டங்களை சந்தித்திருந்தாலும் அவர் மீண்டும் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு திரும்பி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு கடுமையான சூழலிலும் அவர் இந்திய அணிக்காக திரும்ப வேண்டும் என்று விடாமுயற்சியுடன் சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளதற்காக நான் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிங்க : அம்பயருக்கு எதிராக குரல் கொடுத்த தினேஷ் கார்த்திக், ஐபிஎல் நிர்வாகம் கொடுத்த தண்டனை – அப்படி என்ன செய்தார்?

தினேஷ் கார்த்திக் நான் விளையாடிய காலகட்டத்தில் அறிமுகமானவர். ஆனால் இன்றளவும் தனது உடல் வலிமையையும், மனவலிமையையும் சரியாக பேணிக் காத்து வருகிறார். நிச்சயம் அவர் இந்திய அணியில் சிறப்பாக செயல்படுவார் அவருக்கு எனது வாழ்த்துக்கள் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement