கிளப் லெவல் பாகிஸ்தான்.. இந்தியா, ஆஸி லெவலுக்கு இல்ல.. அவங்கள விட பெஸ்ட் மட்டுமே.. அக்தர் வேதனை

Shoaib Akhtar
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 தொடரில் செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அதனால் விளையாடிய 2 போட்டிகளிலும் 2 வெற்றிகள் பெற்ற இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதிப் பெற்றுள்ளது. முன்னதாக அந்தப் போட்டியில் முகமது ரிஸ்வான், பாபர் அசாம் உள்ளிட்ட சொதப்பல் வீரர்களை கழற்றி விட்ட பாகிஸ்தான் சல்மான் ஆகா தலைமையில் களமிறங்கியது.

அதனால் சமீப காலங்களைப் போல் அல்லாமல் போராடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் டாஸ் அதிர்ஷ்டத்தைப் பெற்று முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் முதல் பந்திலேயே விக்கெட்டை விட்ட பாகிஸ்தான் 20 ஓவரில் போராடி 127/9 ரன்கள் எடுத்தது. சொல்லப்போனால் கடைசி நேரத்தில் சாஹின் அப்ரிடி 33* (16) ரன்கள் எடுக்காமல் விட்டிருந்தால் பாகிஸ்தான் 100 ரன்கள் தாண்டியிருக்காது எனலாம்.

- Advertisement -

கிளப் லெவல் பாகிஸ்தான்:

அந்தளவுக்கு பேட்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தானை பந்து வீச்சில் 15.5 ஓவரில் 131/3 ரன்களை அடித்த இந்தியா எளிதாக தோற்கடித்தது. இந்நிலையில் இப்போதைய பாகிஸ்தான் அணி இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற உலகத்தரம் வாய்ந்த அணிகளுக்கு நிகராக இல்லை என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“நமது அணியிடமிருந்து ஏமாற்றமான செயல்திறன் வெளிப்பட்டுள்ளது. 3 விக்கெட்டுகள் எடுத்த சாய்ம் ஆயுப் பவுலர்களில் சிறந்தவராக செயல்பட்டார். அவருடைய தோற்றத்தில் ஒரு வழியாக நாம் 35 வயதில் பாகிஸ்தானுக்கு நல்ல ஸ்பின்னரை கண்டறிந்தது போல் தெரிகிறது. நாம் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தரத்தையும் உலகத்தின் மற்ற அணிகள் விளையாடும் தரத்தையும் வித்தியாசப்படுத்தி பார்க்க வேண்டும்”

- Advertisement -

அக்தர் வேதனை:

“பெரும்பாலான அணிகள் உயர்தர கிரிக்கெட்டை விளையாடும் போது நாம் கிளப் லெவல் கிரிக்கெட்டை விளையாடுகின்றோம். சூரியகுமார் நம்முடைய பவுலர்களை வைத்து இதயத்திலிருந்து ஸ்வீப், கட் போன்ற ஷாட்டுகளை எளிதாக அடிக்கிறார். ஒருவேளை நீங்கள் இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்வது கடினம் என்னிடம் சொன்னால் பின்னர் எப்படி ஷாகின் அப்ரிடி கணிசமான சிக்ஸர்களுடன் 33* (16) ரன்கள் அடித்தார்?”

இதையும் படிங்க: வெறும் 2 போட்டியிலேயே.. கடைசிப் போட்டிக்கு முன் சூப்பர் 4க்கு சுற்றுக்குள் நுழைந்து மாஸ் காட்டிய இந்தியா

“நாம் தரத்தில் தடுமாறுகிறோம். நாம் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற கிரிக்கெட் அணிகளுடன் போட்டி போடுபவர்களாக இல்லை. மாறாக நாம் ஓமன், ஹாங்காங் போன்ற துணை உறுப்பு நாட்டு அணிகளைக் காட்டிலும் சிறந்தவர்களாக மட்டுமே இருக்கிறோம்” என்று வேதனையுடன் பிடிவி தொலைக்காட்சியில் பேசினார்.

Advertisement