இதெல்லாம் 1999லயே பாத்துட்டோம்.. இந்தியர்களிடம் கம்பேக் கொடுக்க வேற என்ன வேணும்.. சோயப் அக்தர்

Shaoib Akhtar
- Advertisement -

அமெரிக்காவில் ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான லீக் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு எப்போதுமே உலக அளவில் எதிர்பார்ப்பு காணப்படுவது வழக்கமாகும். அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா வரலாற்றில் பெரும்பாலும் பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றி கண்டுள்ளது.

குறிப்பாக 2021 துபாய் தோல்வியை தவிர்த்து 20 ஓவர் உலகக் கோப்பையில் சந்தித்த அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியுள்ளது. அந்த சூழ்நிலையில் இந்த தொடரில் அமெரிக்காவிடம் தங்களுடைய முதல் போட்டியில் அவமான தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் பெரிய விமர்சனத்தை சந்தித்துள்ளது. எனவே அந்த அழுத்தத்துடன் எக்ஸ்ட்ரா அழுத்தத்தை கொடுத்து பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -

1999லயே பாத்துட்டோம்:
இவ்விரு அணிகளை ஒப்பிடும் போதும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் போன்ற மேட்ச் வின்னர்கள் நிறைந்திருக்கின்றனர். பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியிலும் ஷாஹீன் அப்ரிடி, ரிஸ்வான் போன்ற தரமான வீரர்கள் இருந்தாலும் அவர்கள் ஃபார்மில் இல்லாதது பாகிஸ்தானுக்கு பின்னடைவாகும்.

அத்துடன் இந்தியாவுக்கு நிகராக பாகிஸ்தான் அணியில் தரமான ஸ்பின்னர் இல்லாததும் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடத் தவறுவதும் பாகிஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிடம் தோற்றதை போல 1999 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியை சந்தித்ததாக சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் அங்கிருந்து கம்பேக் கொடுத்து 1999 உலகக் கோப்பை ஃபைனலுக்கு சென்றதைப் போல இம்முறையும் இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் கம்பேக் கொடுக்க முடியும் என்று அவர் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “தற்போது பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்பது கேள்வியாகும். என்னை நம்புங்கள். பாகிஸ்தான் அணிக்கு இப்போதும் வாய்ப்பிருக்கிறது”

இதையும் படிங்க: பாகிஸ்தான் ஜெயிக்குறதும் தோக்குறதும் விராட் கோலி கையில தான் இருக்கு. ஏன் தெரியுமா? – விவரம் இதோ

“நாம் கீழே விழுந்தாலும் வெளியே சென்றாலும் நம்முடைய உலகக்கோப்பை பயணம் ஆரம்பம் முதலே இப்படித்தான் இருக்கும். 1999 உலகக் கோப்பையை தவிர்த்து நாம் தடுமாறுவது போல் தெரியும். அந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய நாங்கள் துரதிஷ்டவசமாக ஃபைனலில் தோற்றோம். அந்த வகையில் இங்கிருந்து பாகிஸ்தான் கம்பேக் கொடுக்க முடியும். இந்தியா வலுவான எதிரணி. இந்தியர்களுக்கு எதிராக விளையாடுவதே உங்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அல்லவா?” என்று கூறினார்.

Advertisement