- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்நேரம் தெ.ஆ பயந்துருப்பாங்க.. ஃபைனலில் ஜெய்க்க இந்தியா ஒரு மாற்றத்தை செஞ்சாகனும்.. அக்தர் ஆலோசனை

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 29ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள இந்தியா தகுதி பெற்றுள்ளது. ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது செமி ஃபைனலில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 172 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 57, சூரியகுமார் யாதவ் 47 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இங்கிலாந்து வெறும் 103 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 25 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

ஃபைனலில் மாற்றம்:
இதைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்காவை தோற்கடித்து 2007க்குப்பின் இந்தியா கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை இந்தியா தோற்கடித்த விதத்தை பார்த்து தென்னாப்பிரிக்காவுக்கு இந்நேரம் கொஞ்சம் பயம் ஏற்பட்டிருக்கும் என்று சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஃபைனலில் இந்தியா வெல்வதற்கு விராட் கோலி 3வது இடத்திலும் ரிஷப் பண்ட் துவக்க வீரராகவும் விளையாட வைப்பது அவசியம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வெற்றிக்கு தகுதியான இந்தியாவுக்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். அவர்கள் 2 உலகக் கோப்பைகளை வென்றிருக்க வேண்டும் என்று நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன்”

- Advertisement -

“இந்த உலகக் கோப்பையை அவர்கள் கண்டிப்பாக வெல்ல வேண்டும். ஃபைனலில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய பார்க்க வேண்டும். அவர்கள் முதல் ஃபைனலில் விளையாடுகின்றனர். ஆனால் இந்தியாவின் இந்த செயல்பாடுகளுக்குப் பின் தென்னாபிரிக்காவும் கொஞ்சம் பயந்து இருக்கும். ஏனெனில் இந்தியாவின் இந்த ஸ்பின்னர்களுக்கு எதிராக யார் ரன்கள் அடிப்பார்கள்”

இதையும் படிங்க: ஒரு ஓவர் கூட அவருக்கு கொடுக்காதது என் தப்புதான்.. இந்திய அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – ஒப்புக்கொண்ட ஜாஸ் பட்லர்

“இந்தியா கண்டிப்பாக இம்முறை வெல்ல வேண்டும். அதற்கு ரிசப் பண்ட் – ரோகித் சர்மா ஆகியோர் துவக்க வீரராகவும் விராட் கோலி மூன்றாவது இடத்தில் வருவதையும் நான் பார்க்க விரும்புகிறேன். விராட் கோலி தன்னுடைய இயற்கையான விளையாடினால் இந்தியாவின் பிரச்சினை தீர்ந்து விடும். ஏனெனில் ஓப்பனிங் அவருடைய ஆட்டம் கிடையாது. பொதுவாக அவர் நேரம் எடுத்து சுமாரான பந்துகளை அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை முன்னேற்றுவார். எனவே விராட் கோலி இயற்கையான ஓப்பனர் கிடையாது. அதனால் பண்ட் துவக்க வீரர் வந்தால் இந்த பிரச்சனை தீர்ந்து விடும் என்று கருதுகிறேன்” என கூறினார்.

- Advertisement -