அவங்க எங்கயோ போய்ட்டாங்க.. அதை எல்லோராலும் செய்ய முடியாதுன்னு பும்ரா, ஷமி சொன்னாங்க.. சிவம் மாவி

Shivam Mavi
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் சிவம் மாவி தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். உத்திரபிரதேசத்தை சேர்ந்த அவர் கடந்த 2018 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் 2021 சீசனில் சிறப்பாக விளையாடிய அவர் ஒன்பது போட்டிகளில் 11 விக்கெட்டுகளை 7.24 என்ற எக்கனாமியில் எடுத்து அசத்தினார்.

அதே போல 2022 சீசனிலும் கொல்கத்தா அணிக்காக ஓரளவு அசத்திய அவருக்கு இந்த வருடம் இந்தியாவுக்காக விளையாட்டு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் 6 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 7 விக்கெட்டுகளை எடுத்தார். இருப்பினும் அதன் பின் காயத்தை சந்தித்த அவர் 2024 ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாடவில்லை.

- Advertisement -

போராடும் மாவி:

முன்னதாக 2018 அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு சிவம் மாவியும் முக்கிய பங்காற்றினார். அவருடன் விளையாடிய சுப்மன் கில், அர்ஷ்தீப், ரியான் பராக் ஆகியோர் தற்போது சீனியர் இந்திய அணியில் விளையாடுகின்றனர். ஆனால் காயத்தால் அவருக்கு வாய்ப்பு பறிபோயுள்ளது. இருப்பினும் தம்முடைய சக வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடுவதை பார்த்தது உத்வேகத்தை கொடுப்பதாக சிவம் மாவி கூறியுள்ளார்.

அத்துடன் கிரிக்கெட்டில் இருப்பதிலேயே வேகப்பந்து வீச்சு தான் மிகவும் கடினமான வேலை என்று பும்ரா, ஷமி போன்ற சீனியர்கள் சொன்னதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் தமது வேகத்தை குறைக்காமல் குணமடைந்து மீண்டும் இந்தியாவுக்காக விளையாட தயாராகி வருவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கில், அர்ஷ்தீப், ரியான், அபிஷேக் சர்மா ஆகியோர் இந்தியாவுக்காக விளையாடுவது எங்களை மகிழ்ச்சியடைய வைக்கிறது”

- Advertisement -

கடினமான வேலை:

“அவர்கள் நன்றாக விளையாடுவது உங்களுக்கு உத்வேகத்தையும் கொடுக்கிறது. வேகம் தான் எனக்கு அங்கீகாரத்தை கொடுத்தது. ஒருவேளை நீங்கள் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அது பேட்ஸ்மேனுக்கு எளிதாக இருக்கும். காயத்தை சந்தித்த பின் அதே வேகத்தை தொடுவது மிகவும் கடினமாக இருக்கிறது. இது பற்றி நான் பும்ரா, ஷமி பாயிடம் பேசினேன்”

இதையும் படிங்க: தார் ரோட் பிட்ச்சில்.. ஃபிளைட் புடிக்கிறத்துக்குள்ள முடிச்சுட்டாங்க.. பாகிஸ்தான் தோல்வி பற்றி அஸ்வின்

“அவர்களுடைய கருத்துக்களை கேட்க முயற்சித்தேன். அப்போது காயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பதை அவர்களிடம் பேசியதை வைத்து புரிந்து கொண்டேன். குறிப்பாக காயங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியாது வேகப்பந்து வீச்சு எளிதான வேலை கிடையாது அனைவராலும் வேகமாக வீச முடியாது என்று அவர்கள் இருவருமே என்னிடம் சொன்னார்கள்” என்று கூறினார்.

Advertisement