வீடியோ : என் ஓவர்லயா 6 பவுண்டரி அடிக்குற ? போட்டிக்கு பிறகு செல்லமாக ப்ரித்வி ஷாவை கிள்ளிய சிவம் மாவி (வைரல் வீடியோ இதோ)

Mavi
- Advertisement -

டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 25வது லீக் போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக டெல்லி அணியின் துவக்க வீரர்களான ப்ரித்வி ஷா 41 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரி என 82 ரன்கள் குவித்து அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

shaw-2

இந்த போட்டியின் இரண்டாம் பாதியில் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி இலக்கு எளிதானது என்பதால் சற்று நிதானமாக ஆடி இறுதி வரை கொண்டு சென்று வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எப்பொழுதும் அதிரடியாக விளையாடி பழக்கப்பட்ட ப்ரித்வி ஷா நேற்றைய போட்டியில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இரண்டாவது பேட்டிங்கின்போது டெல்லி அணியின் துவக்க வீரரான பிரித்வி ஷா தனது அதிரடியை முதல் ஓவரில் இருந்தே வெளிப்படுத்தினார். முதல் ஓவரை சந்தித்த அவர் அந்த ஓவரை வீசிய சிவம் மாவியின் அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி முதல் ஓவரிலேயே 24 ரன்களை அடித்து அசத்தினார். அதுமட்டுமின்றி 18 பந்துகளில் 50 ரன்களை கடந்த அவர் டெல்லி அணி சார்பாக அதிவேகமாக அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் நேற்றைய போட்டியில் நிகழ்த்தினார்.

Shaw-3

இறுதியில் 41 பந்துகளை சந்தித்த அவர் 3 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரி என 82 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இந்நிலையில் போட்டி முடிந்து தனது ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்த ப்ரித்வி ஷாவை கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷிவம் மாவி செல்லமாக கிள்ளியே வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே அண்டர் 19 அணியில் இருவரும் இணைந்து விளையாடியதால் அவர் எங்கு பந்துவீச போகிறார் என்பதை தெரிந்து நான் அந்த 6 பவுண்டரிகளை அடித்ததாக ப்ரித்வி ஷா கூறி இருந்தார்.

இப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :

Advertisement