- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உடைந்த சிவம் துபேவின் லக்கிமேன் உலக சாதனை.. 17 வருடம் கழித்து மண்ணைக் கவ்விய இந்தியா

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அடுத்து நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. அக்டோபர் 31ஆம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 68 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 13.2 ஓவரில் 126/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை தொடரில் பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் மிட்சேல் மார்ஷ் 46 ரன்கள் இந்தியாவுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகள் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

மெல்போர்னில் தோல்வி:

இதன் வாயிலாக உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 17 வருடங்கள் கழித்து இந்தியா ஒரு டி20 போட்டியில் தோல்வியை சந்தித்தது. கடைசியாக 2008ஆம் ஆண்டு அம்மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. அதன் பின் நடைபெற்ற 3 போட்டிகளில் 2 முறை ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா அசத்தியது.

1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. அப்படி மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா போட்டு வந்த அந்த வெற்றி நடை இன்று முடிந்துள்ளது. அது போக 37 போட்டிக்கு பின் சிவம் துபே விளையாடிய ஒரு போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. கடைசியாக 2011ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் சிவம் துபே விளையாடிய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா தோற்றது.

- Advertisement -

முடிந்த சிவம் துபே அதிர்ஷ்டம்:

அப்போதிலிருந்து கடந்த 5 வருடங்களில் சிவம் துபே விளையாடிய 37 டி20 போட்டிகளில் இந்தியா 34 வெற்றிகளைப் பெற்றது. 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையையும் வென்றும் சாதனைப் படைத்தது. அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக (37) போட்டிகளில் தோல்வியை சந்திக்காத வீரர் என்ற உலக சாதனையை துபே படைத்தார்.

இதையும் படிங்க: அந்த ஆஸி வீரர் தனியாளாக இந்தியாவை சாய்ச்சுட்டாரு.. அபிஷேக் மாற மாட்டாருன்னு நம்புறேன்.. சூரியகுமார் வருத்தம்

அவருக்கு அடுத்தபடியாக உகாண்டா வீரர் பாஸ்கல் முருங்கி 2022 முதல் தொடர்ந்து 27 போட்டிகளில் தோல்வியை சந்திக்காத வீரராக திகழ்கிறார். ஆனால் இன்றைய போட்டியில் இந்தியா தோற்றதால் சிவம் துபேவின் அந்த உலக சாதனை வெற்றி நடை உடைந்தது. இதைத் தொடர்ந்து 3வது போட்டியில் வெற்றி பெற இந்தியா தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -