டிரேடிங் முறையில் ஷிவம் துபேவை வெளியேற்ற இருக்கும் சி.எஸ்.கே – எந்த அணிக்கு தெரியுமா?

Dube
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து 2023-ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்போடு எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்கான சீசனுக்காக தயாராகி வருகிறது.

டிரேடிங் முறையில் செல்லப்போகும் வீரர் சி.எஸ்.கே வீரர் :

இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதியில் மெகா ஏலம் நடைபெறயிருக்கிறது. அதற்கு முன்பாகவே சில முக்கிய வீரர்கள் டிரேடிங் முறையில் அணிமாற்றம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

கடந்த சீசனில் குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவை மும்பை அணி பெரிய விலை கொடுத்து டிரேடிங் செய்தது அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியிருந்தது. அதே போன்று அடுத்த ஆண்டிற்குள் சென்னை அணியில் இருந்து ஷிவம் துபே டிரேடிங் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே சென்னை அணி ஒரே ஒரு வீரராக ராபின் உத்தப்பா மட்டும்தான் டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது. மற்றபடி எந்த ஒரு வீரரையும் டிரேடிங் முறையில் வாங்கியதோ, வெளியேற்றியதோ கிடையாது. இந்நிலையில் எதிர்வரும் 2025 ஐ.பி.எல் தொடருக்கு முன்பாக சிஎஸ்கே அணி ஷிவம் துபேவை டிரேட் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஒருவேளை ஷிவம் துபே டிரேட் செய்யப்படும் பட்சத்தில் நிச்சயம் ராஜஸ்தான் அல்லது டெல்லி அணிக்காக தான் டிரேட் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ராஜஸ்தான் அணியில் சஞ்சு சம்சனும், டெல்லியில் ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவரை வாங்குவதற்காகத்தான் இந்த டிரேட் நடக்கும்.

இதையும் படிங்க : 146க்கு ஆல் அவுட்.. பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஓடவிட்ட வங்கதேசம்.. 24 வருட சரித்திர உலக சாதனை வெற்றி

தோனிக்கு அடுத்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சென்னைக்கு வேண்டும் என்பதனால் அந்த முடிவை சி.எஸ்.கே எடுத்துள்ளது. அவர்கள் இருவரை தவிர்த்து வேறு எந்த வீரருக்காகவும் ஷிவம் துபேவை சிஎஸ்கே அணி டிரேட் செய்யாது. ஒருவேளை இந்த டிரேட் சாத்தியமாகும் பட்சத்தில் சிஎஸ்கே அணி இரண்டாவது வீரராக ஒருவரை டிரேட் செய்து பெரிய மாற்றத்தை அளிக்கும் என்பது உறுதி.

Advertisement