உங்களால முடியும்னு சொல்லி ரோஹித் சர்மா சொன்ன அந்த வார்த்தை.. ஷிவம் துபே நெகிழ்ச்சி – விவரம் இதோ

Dube
- Advertisement -

இந்திய அணியின் இளம் ஆல் ரவுண்டான ஷிவம் துபே கடந்த 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அப்படி அறிமுகமான ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் அவருக்கு அதே ஆண்டு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான ஷிவம் துபே இதுவரை 19 போட்டிகளில் விளையாடி 212 ரன்கள் குவித்துள்ளார்.

அதேபோன்று 2019-ஆம் ஆண்டு ஒரேயொரு சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர் 9 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான போது அதிரடியாக விளையாடி யுவராஜ் சிங்கை ஞாபகப்படுத்துகிறார் என்று கூறப்பட்டதால் அவருக்கு சில வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் சோபிக்க தவறிய அவர் இந்திய அணியில் இருந்து காலப்போக்கில் வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

அதன் பிறகு ஐபிஎல் தொடரில் சில அணிகளுக்கு அவர் மாறி மாறி விளையாடினாலும் இறுதியாக சென்னை அணி அவரை தேர்வு செய்த பிறகு அவருடைய ஆட்டம் வேறு லெவலுக்கு மாறியது. அதிலும் குறிப்பாக தோனியின் தலைமையில் அவர் ஐபிஎல் தொடரில் சிக்ஸர்களாக வெளுத்து வாங்க சிக்சர் துபே என்ற செல்ல பெயரும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது.

இந்நிலையில் சமீப காலமாகவே அவரது அதிரடியான ஆட்டம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்க்க மீண்டும் அவருக்கு கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் அயர்லாந்து தொடர், ஏசியன் கேம்ஸ், ஆஸ்திரேலியா டி20 தொடர் என அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்படி தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட அவருக்கு ஆப்கானிஸ்தான் தொடரிலும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

அப்படி தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்ட அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதல் போட்டியில் பந்துவீச்சில் 2 ஓவர்கள் வீசி 9 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். அதோடு பேட்டிங்கில் ஆட்டம் இழக்காமல் 60 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இந்நிலையில் தனது சிறப்பான ஆட்டத்திற்கு ரோகித் சர்மா கொடுத்த ஒரு ஆதரவும் காரணம் என்று கூறிய ஷிவம் துபே கூறுகையில் :

இதையும் படிங்க : சும்மா அடி பட்டாலே வீட்டுக்கு போற இந்திய வீரர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு வீரரா? – ரஷீத் கானை பார்த்து வியந்த ரசிகர்கள்

கேப்டன் ரோஹித் என்னிடம் வந்து ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தான் சொன்னார். நீங்கள் எப்படி ஆடுகிறீர்களோ, உங்களுடைய பலம் எதுவோ, அதன்படியே விளையாடுங்கள். எப்போதும் பாசிட்டிவான கிரிக்கெட்டை மட்டுமே நீங்கள் ஆட வேண்டும். எங்கிருந்து வேண்டுமென்றாலும் உங்களால் ஆட்டத்தை வெல்ல முடியும். உங்களால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியும் என்று அவர் கொடுத்த ஒரு உற்சாகமே என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது என ஷிவம் துபே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement