மோர்னே மோர்கல் தந்த பிராக்டீஸ் தான் இதுக்கெல்லாம் காரணம் – ஷிவம் துபே பேட்டி

Shivam Dube
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷிவம் துபே கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இருந்தாலும் அதற்கடுத்த 2020-ஆம் ஆண்டு மோசமான செயல்பாடு காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதிலும் குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரே ஓவரில் 34 ரன்கள் விட்டுக் கொடுத்து டி20 போட்டிகளில் ஒரே ஓவரில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனையுடன் அவர் இந்திய அணியிலிருந்து வெளியேறியிருந்தார்.

மோர்னே மோர்கல் தான் எனக்கு உதவி செய்தார் : ஷிவம் துபே

ஆனால் அதன்பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் தனது பவர் ஹிட்டிங் எபிலிட்டியை வெளிப்படுத்திய அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடியிருந்த வேளையில் இந்திய டி20 அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுத்து 2024 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பினிஷராக இடம் பிடித்திருந்தார்.

- Advertisement -

அந்த தொடர்பு முழுவதுமே ஒருவர் மட்டுமே வீசியிருந்த அவர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார். பேட்டிங்கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் பந்து வீச்சிலும் தற்போது கைகொடுக்க துவங்கியுள்ளார். இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா மட்டுமே வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருந்து வருகிறார்.

இவ்வேளையில் அவருக்கு உறுதுணையாக ஷிவம் துபே தற்போது பவுலிங்கில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளார். இந்த ஆண்டு மட்டும் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் அதிகப்படியான ஓவர்களையும் வீச ஆரம்பித்துள்ளார். டி20 போட்டிகளில் தான் இந்திய அணிக்காக பந்துவீச காரணமே மோர்னே மோர்கல் தான் என்று பேசியுள்ளளார்.

- Advertisement -

அது குறித்து அவர் கூறியதாவது : நான் என்னுடைய பிட்னஸில் கடுமையாக உழைத்து வருகிறேன். இந்திய அணிக்குள் நான் மீண்டும் வந்த பிறகு பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் என்னிடம் வந்து நீ பந்துவீச்சில் மீண்டும் கவனத்தினை செலுத்து என்று கூறி எனக்கு நிறையவே பயிற்சி கொடுத்தார். அவர் கொடுத்த ஊக்கம் தான் மீண்டும் நான் பந்துவீச்சு துறையில் சாதிக்க காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க : மூளையை யூஸ் பண்ணா 600.. பீட்டர்சன் முகத்தில் கரியை பூசும் வகையில் சொதப்பிய இங்கிலாந்து.. ஆஸி அசத்தல்

அவர் போட்டியின் எந்த சூழலில் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பது குறித்த பல்வேறு விளக்கங்களையும், என்னுடைய பௌலிங் ஸ்டைலுக்கு ஏற்றவாறு எவ்வாறு பந்துவீச வேண்டும் என்ற நுணுக்கங்களையும் தெரிவித்தார். அதன்பிறகு நான் தற்போது டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக பந்து வீசி வருகிறேன் என்றும் ஷிவம் துபே பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement