
ஐபிஎல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அணியாக விளங்கிவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை நான்கு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி மும்பை அணிக்கு அடுத்த இடத்தில் உள்ளது. தோனி தலைமையிலான சென்னை அணி ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை ஒரே கேப்டனுக்கு கீழ் செயல்பட்டு வரும் அணியாகவும் பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் மத்தியில் பெரிய ஆதரவை பெற்றுள்ள சென்னை அணி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நடப்பு சாம்பியனாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சென்னையில் இருந்து சில முன்னணி வீரர்கள் கழட்டி விட்டனர். அப்படி மெகா ஏலத்தின் போது கழட்டி விடப்பட்ட வீரர்களில் டூபிளெஸ்ஸிஸ், ரெய்னா, ஷர்துல் தாகூர் போன்றோர் சென்னை அணியில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும் குறிப்பிட்ட சில வீரர்களை சென்னை அணி குறிவைத்து வாங்கியது அனைவரது மத்தியிலும் சற்று ஆறுதலை தந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய சிவம் துபேவை இந்த ஆண்டு 4 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.
ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சில அணிகளுக்காக விளையாடி இருந்தாலும் தோனியின் கீழ் அவர் விளையாட இருப்பதன் மூலம் அவரது திறன் நிச்சயம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் சென்னை அணியில் விளையாட தேர்வானது குறித்து பேசியுள்ள சிவம் துபே கூறுகையில் : நான் சென்னை அணிக்காக தேர்வானது மிகப்பெரிய விடயம். அவர்கள் என்னை தேர்வு செய்வார்கள் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
சென்னை அணிக்கு தேர்வானதை நான் நினைத்து விவரிக்க வேண்டுமெனில் அதற்கு வார்த்தைகள் கூட என்னிடம் கிடையாது. அந்த அளவிற்கு மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. மற்ற அணிகளை காட்டிலும் எப்போதுமே சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு வருவதால் அந்த அணியில் ஒரு அங்கம் வகிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சி. மேலும் சென்னை அணி என்னை எந்த நம்பிக்கையில் தேர்வு செய்ததோ அதற்காக நான் என்னுடைய கடின உழைப்பு வழங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று கூறினார்.
இதையும் படிங்க : இந்தியாவின் அடுத்த கேப்டன் யார் என்பது இதில் தெரிந்துவிடும் – ரவி சாஸ்திரியின் கணிப்பு
மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தோனியுடன் இணைந்து செயல்பட இப்படி ஒரு நெருக்கமான வாய்ப்பு கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி. நிச்சயம் எனது திறனை இந்த சீசனில் மென்மேலும் வளர்த்துக் கொள்வது மட்டுமின்றி என்னால் முடிந்த சிறப்பான பங்களிப்பை சென்னை அணிக்காக வழங்குவேன் என ஷிவம் துபே கூறியது குறிப்பிடத்தக்கது.