- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஷிவம் தூபேவிற்கு இதுவே கடைசி டி20 உலககோப்பை தொடர்.. ஏன் தெரியுமா? – காரணம் இதோ

கடந்த 2024-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரினை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியிருந்தது. அதன்மூலம் கடந்த 2007-ஆம் ஆண்டுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக டி20 போட்டிகளின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றி அசத்தியிருந்தது.

ஷிவம் துபேவிற்கு இதுவே கடைசி டி20 உலககோப்பை தொடர் :

இந்திய அணி பெற்ற அந்த வெற்றி ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்படுத்தி இருந்தது. ஏனெனில் கடைசி பல ஐ.சி.சி தொடர்களாகவே இறுதிவரை சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்ற முடியாமல் பல கோப்பைகளை இந்திய அணி இழந்துள்ளது. அதனால் 2024 டி20 உலககோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றியது அனைவரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

- Advertisement -

இவ்வேளை அடுத்து 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரானது எதிர்வரும் பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் இந்திய அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்க தயாராக வருகிறது.

அந்த வகையில் எதிர்வரும் இந்த 2026 டி20 உலககோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை நேற்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த 15 பேர் கொண்ட இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷிவம் துபேவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

கடந்த உலக கோப்பை தொடரின் போது இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த அவரை இந்த தொடரிலும் நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. ஆனால் எதிர்வரும் இந்த 2026 டி20 உலக கோப்பை தொடர்தான் அவருக்கு கடைசி டி20 உலக கோப்பை தொடர் என்று கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது 33 வயதை நெருங்கி உள்ள ஷிவம் துபே அடுத்த 2028 டி20 உலக கோப்பை தொடருக்குள் 35 வயதை நெருங்கி விடுவார்.

இதையும் படிங்க : சுப்மன் கில் விடயத்தில் நிர்வாகம் எடுத்த இந்த முடிவு தவறானது – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

எனவே அவரது வயது முதிர்வை காரணம் காட்டி நிர்வாகம் இளம் வீரர்களை நோக்கி சென்றுவிடும். அந்த வகையில் ஷிவம் துபேவை நிர்வாகம் புறக்கணிக்கும் பட்சத்தில் அடுத்ததாக நிதிஷ் ரெட்டியை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக தயார் செய்யும். எனவே ஷிவம் துபேவுக்கு இதுதான் கடைசி டி20 உலக கோப்பை தொடர் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -