வங்கதேச டி20 தொடரில் விலகிய சிவம் துபே.. மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ.. வெளியான அறிவிப்பு

Shivam Dube
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்தது. இதைத் தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது.

அந்தத் தொடரில் புதிய கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி களமிறங்குகிறது. இந்நிலையில் அந்தத் தொடருக்கான இந்திய அணியிலிருந்து சிவம் துபே விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடருக்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது சிவம் துபே காயமடைந்ததாக தெரிகிறது.

- Advertisement -

சிவம் துபே விலகல்:

அதனால் இத்தொடரிலிருந்து அவர் முழுமையாக விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. சிஎஸ்கே அணியில் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை பறக்க விட்ட துபே 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வானார். அந்த வாய்ப்பில் லீக் சுற்றில் சுமாராகவே விளையாடிய அவர் முக்கியமான இறுதிப் போட்டியில் முக்கிய ரன்களை அதிரடியாக எடுத்து இந்தியாவின் வெற்றியில் தம்முடைய பங்காற்றினார்.

அதைத் தொடர்ந்து இலங்கைத் தொடரிலும் விளையாடிய துபே தற்போது காயத்தால் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக காயத்திலிருந்து குணமடைந்துள்ள திலக் வர்மா இந்திய அணிக்காக விளையாட உள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அதிரடியாக விளையாடிய அவர் 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் அறிமுகமானார்.

- Advertisement -

திலக் வர்மா கம்பேக்:

அந்த வாய்ப்பில் 16 போட்டிகளில் 336 ரன்களையும் 2 விக்கெட்டுகளையும் எடுத்த அவர் அடுத்த சுரேஷ் ரெய்னா என்று ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு அசுத்தினார். இருப்பினும் கடந்த ஐபிஎல் தொடரில் காயத்தை சந்தித்த அவர் தற்போது குணமடைந்து 2024 துலீப் கோப்பையில் சதமடித்தார். அதன் காரணமாக மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு திலக் வர்மாவுக்கு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: மிஸ் பண்றோம்.. ஆனா அவர் இல்லாமயே குவாலியரில் இந்தியாவை வீழ்த்துவோம்.. வங்கதேச வீரர் நம்பிக்கை

இதைத் தொடர்ந்து அக்டோபர் 6ஆம் தேதி துவங்கும் டி20 தொடரிலும் வங்கதேசத்தை வீழ்த்த இந்திய அணி தயாராகியுள்ளது. குறிப்பாக சமீபத்தில் இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய இளம் அணி வீழ்த்தியது. அதே உத்வேகத்துடன் இந்தத் தொடரிலும் வங்கதேசத்தை இந்திய அணி வீழ்த்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement