- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஐ.பி.எல் போட்டிகளிலும் நான் இதை செய்ய தயார்.. தனது விருப்பத்தை தெரிவித்த – ஷிவம் துபே

ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது லீக் போட்டியில் விளையாடிய இந்திய அணி அந்த அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த போட்டியின் போது இந்திய அணி பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது. ஏனெனில் இந்திய அணி சார்பாக பந்துவீசிய அனைவருமே மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஐ.பி.எல் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்த தயார் : ஷிவம் துபே

அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களான ஹார்டிக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் பந்துவீச்சில் பெரிய பங்களிப்பை வழங்கி இருந்தனர். அதிலும் குறிப்பாக ஷிவம் துபே 2 ஓவர்களை வீசி 4 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இதன்மூலம் பந்துவீச்சில் தனக்கு இருக்கும் திறமையை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

மித வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷிவம் துபே கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் போட்டிகளில் பந்துவீசாமல் இருந்து வந்தார். குறிப்பாக கடந்த மூன்று சீசன்களில் அவர் சென்னை அணிக்காக மூன்றே ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். ஆனால் தற்போது சர்வதேச டி20 போட்டிகளில் தனது பந்துவீச்சு திறனை மேம்படுத்த வேண்டும் என்பதனால் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கலுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அதோடு அவர் தற்போது ஆசிய கோப்பை போட்டியில் பந்து வீசியும் வருகிறார். மேலும் இனிவரும் போட்டிகளிலும் தான் தொடர்ந்து பந்துவீச விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியை தாண்டி ஐபிஎல் போட்டிகளிலும் தான் பந்துவீச தயார் என்பதை ஷிவம் துபே சுட்டி காட்டியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்டு பிளேயர் ரூல் இருப்பதால் ஆல் ரவுண்டர்களின் தேவை குறைந்து விட்டதாக கருதுகிறேன். அதனால் ஐபிஎல் போட்டிகளின் போது நான் பந்துவீச தேவை இல்லாமல் போகிறது. ஆனால் நான் எப்பொழுதுமே சிஎஸ்கே அணிக்காக பந்து வீச்சில் கை கொடுக்க காத்திருக்கிறேன். அதனால் தான் தொடர்ந்து பந்து வீச்சிலும் பயிற்சியினை மேற்கொண்டு வருகிறேன்.

இதையும் படிங்க : ரவிச்சந்திரன் அஷ்வினை தாண்டி யுஸ்வேந்திர சாஹலுடன் சாதனையில் இணைந்த குல்தீப் யாதவ் – விவரம் இதோ

எப்பொழுது என்னை பந்துவீச அழைத்தாலும் நான் தயாராக இருக்கிறேன். ஒவ்வொரு ஐபிஎல் தொடருக்கு முன்னதாகவும் நான் தயாராகும் போது பந்து வீச்சிலும் கவனத்தை செலுத்துகிறேன். குறிப்பாக இரண்டு மாதங்கள் என்னுடைய பிட்னஸிலும் பந்துவீச்சிலும் நான் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக செலவிடுகிறேன் என ஷிவம் துபே கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -