ரவிச்சந்திரன் அஷ்வினை தாண்டி யுஸ்வேந்திர சாஹலுடன் சாதனையில் இணைந்த குல்தீப் யாதவ் – விவரம் இதோ

Kuldeep Yadav
- Advertisement -

கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது அவர்களை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின் போது முதலில் பந்துவீசிய இந்திய அணி 13.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி 57 ரன்களில் அந்த அணியை சுருட்டியது.

யுஸ்வேந்திர சாஹலுடன் சாதனையில் இணைந்த குல்தீப் யாதவ் :

பின்னர் 58 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 4.3 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து 60 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி முதல் போட்டியிலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார். இந்த போட்டியில் 2.1 ஓவரை வீசிய அவர் 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

அவரது இந்த சிறப்பான பந்துவீச்சே வெற்றிக்கு காரணமாக மாறிய வேளையில் அவர் பெற்ற இந்த ஆட்டநாயகன் விருதின் மூலம் முன்னாள் இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினை கடந்து யுஸ்வேந்திர சாஹலுடன் ஒரு முக்கிய சாதனையில் இணைந்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் குல்தீப் யாதவ் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச டி20 போட்டிகளை பொருத்தமட்டில் நான்கு முறை ஆட்டநாயகன் விருதினை வென்றுள்ள இந்திய வீரர்களான ரவிச்சந்திரன் அஷ்வின், ஷிகார் தவான், தினேஷ் கார்த்திக் ஆகியோரை குல்தீப் யாதவ் கடந்துள்ளார்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் பிளேயிங் லெவனுக்குள் வரும் நட்சத்திர வீரர் – விவரம் இதோ

அதோடு ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக பெற்ற ஆட்டநாயகன் விருதினையும் சேர்த்து 5 ஆவது முறையாக டி20 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதினை வென்றுள்ள குல்தீப் யாதவ் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய சுழற்பந்து வீச்சாளராக அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்றிருந்த யுஸ்வேந்திர சாஹலுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement