இளம் வீரரின் வருகையால் இந்திய டி20 அணியில் தனது இடத்தை இழந்த சி.எஸ்.கே வீரர் ஷிவம் துபே – காரணம் என்ன?

Dube
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜனவரி 22-ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதில் சில வீரர்களுக்கு அதிரடியாக வாய்ப்பு மறுக்கப்பட்டும், சில வீரர்களுக்கு ஆச்சரியமான வகையில் மீண்டும் வாய்ப்பும் வழங்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஷிவம் துபே :

அந்த வகையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த சி.எஸ்.கே அணியின் முன்னணி நட்சத்திர வீரரான ஷிவம் துபே நீக்கப்பட்டது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகளில் அவர் சுமாராக விளையாடினாலும், நாக் அவுட் சுற்று போட்டிகளில் அற்புதமான ஆட்டத்தில் வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு கை கொடுத்திருந்தார். டி20 போட்டிகளில் அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக மீண்டும் அவருக்கு ஒருநாள் போட்டிகளிலும் இடம் கிடைத்தது. அதன்காரணமாக அவர் தொடர்ந்து இந்திய அணியில் பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இடையில் ஏற்பட்ட காயம் காரணமாக பின்னடைவை சந்தித்த ஷிவம் துபே வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர்களை தவறவிட்டார். அதனை தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த அவர் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் தற்போது அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு பின்னணியில் உள்ள உள்ள காரணம் யாதெனில் : இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் தற்போது வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக ஹார்டிக் பாண்டியா மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் பாண்டியா முதன்மை வீரர் என்றாலும் நிதிஷ் குமார் ரெட்டி ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக அவருக்கு டி20 போட்டிகளுக்கான வாய்ப்பினை மீண்டும் நிர்வாகம் வழங்கியுள்ளது.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதையும் பும்ரா தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் – என்ன நடந்தது?

இதன் காரணமாக நித்தீஷ் குமாரின் வருகையால் தற்போது சோம்பு தனக்கு வாய்ப்பை இழந்துள்ளார் மேலும் தற்போது 31 வயதாகும் அவரை விட 23 வயது ஆகும் எதிர்கால ஆளுர ஒன்றாக இந்திய அணி பார்ப்பதால் இனி சோம்பு இந்திய டி20 அடியில் இட ஒழிப்பது கடிதம் என்று கூறப்படுகிறது

Advertisement