சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதையும் பும்ரா தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் – என்ன நடந்தது?

Bumrah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில் நடைபெற்ற முடிந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்சில் முதுகுப்பகுதியில் அசவுகரியத்தை உணர்ந்தார். அதன் பின்னர் மைதானத்தில் இருந்து வெளியேறிய அவர் உடனடியாக மருத்துவமனைக்கும் முதலுதவிக்காக கொண்டு செல்லப்பட்டார்.

சாம்பியன்ஸ் டிராபியை தவறவிடும் பும்ரா :

அப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் முதுகுப்பகுதியில் தசைப்பிடிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வந்த பும்ரா இரண்டாவது இன்னிங்சின் போது பந்துவீச வரவில்லை.

- Advertisement -

அவரது காயத்தின் தன்மை அதிகரிக்கக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கை காரணமாக அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா பந்து வீசவில்லை என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடர் முடிந்து நாடு திரும்பிய பும்ரா தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவ குழு கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இவ்வேளையில் அவர் எப்போது மீண்டும் காயத்தில் இருந்து விடுபட்டு இந்திய அணிக்கு வருவார்? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்திய அணிக்கு எதிர்வரும் சாம்பியன் டிராபி தொடரானது முக்கிய தொடராக பார்க்கப்படும் வேளையில் அந்த தொடரை பும்ரா முற்றிலும் தவற விட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

ஏனெனில் பும்ராவிற்கு முதுகுப்பகுதியில் எலும்பு முறிவு ஏற்படவில்லை என்றாலும் வீக்கம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த வீக்கம் குணமடைய கிட்டத்தட்ட இரண்டு மாதம் வரை ஆகும் என்பதனால் மார்ச் மாதம் முடியும் வரை அவர் இந்த பிரச்சனையில் இருந்து மீளமுடியாது என்று தெரிகிறது.

இதையும் படிங்க : கடைசியாக தெ.ஆ தொடரில் விளையாடிய பின்னர் இங்கிலாந்து டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்ட – 5 வீரர்கள்

இதன் காரணமாக தற்போதைய நிலவரப்படி அவரால் மார்ச் மாதம் முழுவதுமே விளையாட முடியாது என்று கூறப்பட்டுள்ளதால் அவர் ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை தவறவிட வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement