நான் அவர ஃபாலோ பண்ணி அடிக்கிறேன்.. என்னோட கம்பேக்கிற்கு அவங்கள பாராட்டுங்க.. துபே பேட்டி

Shivam Dube 5.jpeg
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஜனவரி 14ஆம் தேதி இந்தூரில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஏற்கனவே இத்தொடரின் முதல் போட்டியிலும் வென்ற இந்தியா இந்த வெற்றியையும் சேர்த்து 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றி தங்களை சொந்த மண்ணில் வலுவான உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணி என்பதை மீண்டும் காண்பித்துள்ளது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் குல்பதின் நைப் 57 ரன்கள் எடுத்த உதவியுடன் 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த இந்தியாவுக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். இருப்பினும் ஜெய்ஸ்வால் 68 (34) சிவம் துபே 63* (32) ரன்கள் விளாசி இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

கம்பேக் பாராட்டு:
மேலும் முதல் போட்டியில் 60* (40) ரன்கள் 1 விக்கெட் எடுத்த சிவம் துபே இந்த போட்டியிலும் 68* (32) ரன்கள் 1 விக்கெட் எடுத்து இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெறுவதற்கு ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான அவர் சுமாராக செயல்பட்டதால் மறு வாய்ப்பு கொடுக்கப்படாமல் கழற்றி விடப்பட்டார்.

அதைத்தொடர்ந்து பெங்களூரு, ராஜஸ்தான் போன்ற ஐபிஎல் அணிகளிலும் சுமாராக செயல்பட்டு வந்த அவரை 2022இல் சென்னை சூப்பர் கிங்ஸ் நம்பி வாங்கியது. அதில் தோனி எனும் மகத்தான கேப்டன் தலைமையில் முதல் சீசனில் 289 ரன்கள் எடுத்து அசத்திய சிவம் துபே 2023 சீசனில் தம்முடைய கேரியரிலேயே உச்சமாக 411 ரன்கள் விளாசி சென்னை 5வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினர்.

- Advertisement -

அதன் காரணமாக சீனாவில் நடந்த 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தேர்வாகி தங்கப்பதக்கம் வெல்ல உதவிய அவர் தற்போது சீனியர் அணியிலும் அபாரமான கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தம்முடைய கம்பேக்கிற்கு எம்எஸ் தோனி மற்றும் சிஎஸ்கே கொடுத்த ஆதரவு தான் காரணம் என்று சிவம் துபே நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: நல்ல ஸ்டார்ட் கெடைச்சும் தவறவிட்டுட்டோம்.. இரண்டாவது போட்டியின் தோல்விக்கு பிறகு – ஆப்கானிஸ்தான் கேப்டன் வருத்தம்

“என்னுடைய வெற்றிகரமான செயல்பாடுகளுக்கான பாராட்டுக்கள் எம்எஸ் தோனி மற்றும் சிஎஸ்கே அணியை சேரும். ஏனெனில் என்னால் சாதிக்க முடியும் என்று மஹி பாய் எனக்கு நம்பிக்கையை கொடுத்தார். அதே போல சிஎஸ்கே அணி நிர்வாகம் என்னை நம்புவதாகவும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் சொன்னார்கள். இந்தியாவுக்காக கடந்த பல வருடங்களாக தோனி பாய் ஃபினிஷிங் செய்த போட்டிகளை நான் பார்த்துள்ளேன். தற்போது அவரை நான் பற்றி விளையாடுகிறேன்” என்று கூறினார்.

Advertisement