நல்ல ஸ்டார்ட் கெடைச்சும் தவறவிட்டுட்டோம்.. இரண்டாவது போட்டியின் தோல்விக்கு பிறகு – ஆப்கானிஸ்தான் கேப்டன் வருத்தம்

Ibrahim-Zadran
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது தற்போது இங்கு நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே ஜனவரி 11-ஆம் தேதி மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணியானது, ஜனவரி 14-ஆம் தேதி இந்தூரில் நடைபெற்று முடிந்த போட்டியிலும் தோல்வியை சந்தித்து இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது.

அந்த வகையில் இந்தூரில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 172 ரன்கள் குவிக்க பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 173 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது.

- Advertisement -

இந்தியா போன்ற பலமான அணிக்கு எதிராக இவர்களது இன்றைய செயல்பாடு சிறப்பாக இருந்தாலும் வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இந்நிலையில் போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இப்ராஹிம் ஜாட்ரான் கூறுகையில் :

நாங்கள் இந்த போட்டியில் இன்னும் சற்று நன்றாக விளையாடி ரன்களை குவித்திருக்க வேண்டும். எங்களுடைய இன்றைய ஆட்டத்தில் ஸ்டார்டிங் நன்றாக இருந்தாலும் அதனை அப்படியே கொண்டு செல்ல முடியவில்லை. ஒருமுறை நாங்கள் துவக்க ஓவர்களில் நன்றாக விளையாடுகிறோம்.

- Advertisement -

ஒருசில முறை மிடில் ஓவர்களில் நன்றாக விளையாடுகிறோம். ஒருசில முறை இறுதிகட்ட ஓவர்களில் சிறப்பாக விளையாடுகிறோம். ஆனால் டி20 போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமெனில் அனைத்து நேரங்களிலும் சிறப்பாக விளையாடி முமென்டத்தை கையில் வைத்திருக்க வேண்டும். அப்படி தவறுகளை செய்யாமல் சிறப்பாக விளையாடினால் மட்டுமே டி20 உலக கோப்பை கைப்பற்ற முடியும்.

இதையும் படிங்க : ரொம்ப பெருமையா இருக்கு.. நம்ம பசங்க சொன்ன வேலைய சிறப்பா செய்ஞ்சிட்டாங்க – ரோஹித் சர்மா பாராட்டு

குல்புதீன் நயிப் எங்கள் அணியில் உள்ள சீனியர் வீரர். அவர் மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. அவர் சில ஷாட்களை பவர்பிளே ஓவர்களில் அடிக்க ஆரம்பித்து விட்டால் நிச்சயம் அதனை இன்னிங்ஸ் முழுவதும் எடுத்துச் செல்வார் என்று நம்புவதாக ஆப்கானிஸ்தான் கேப்டன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement