சி.எஸ்.கே அணிக்கு எதிராக நான் செய்த தவறில் இருந்து நல்ல பாடத்தை கற்றுக்கொண்டேன் – ஹெட்மயர் வெளிப்படை

Hetmyer
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 23 வது லீக் போட்டி நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார்.

dcvsrr

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக 24 பந்துகளை சந்தித்த ஹெட்மையர் 5 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என 45 ரன்களும், மார்க்கஸ் ஸ்டாய்நிஸ் 39 ரன்களும் குவித்தனர். அடுத்ததாக 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே அடித்தது.

ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக ராகுல் திவாதியா 38 ரன்களும், யாஷஸ்வி ஜெய்ஸ்வல் 34 ரன்களை குவித்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி 22 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின் ஆட்டநாயகனாக தேர்வானார்.

ashwin

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹெட்மையர் கூறுகையில் : நாள் பயிற்சியின்போது கேட்சிங் மற்றும் பீல்டிங்கில் மிக அதிகமாக உழைத்தேன் குறிப்பாக சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் சில கேட்சிகளை நான் தவற விட்டேன். அதனால் இம்முறை சிறப்பாக திரும்பி வரவேண்டும் என்று என்னுடைய பீல்டிங்கில் நான் அதிகமாக பயிற்சி எடுத்தேன். இந்த போட்டியில் என்னுடைய பீல்டிங் திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று முழு முயற்சியும் செய்தேன்.

hetmyer 1

அதன் காரணமாக சில டைவ் கேட்சிகளையும் நான் பிடிக்க முடிந்தது. மேலும் இந்த போட்டியில் நான் முழுமையாக விளையாடியதாக நினைக்கிறேன். வலைப்பயிற்சியில் என்னென்ன பயிற்சி செய்தேனோ அதனை இப்போட்டியில் பேட்டிங்கிலும் செயல்படுத்தினேன். இன்று நான் விளையாடிய விதம் உண்மையிலேயே எனக்கு பெருமை அளிக்கிறது என்று ஹெட்மயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement