IND vs WI : 3 ஆவது போட்டியில் இந்திய அணியை வீழ்த்த கீ பிளேயரை களமிறக்கும் – வெஸ்ட் இண்டீஸ் அணி

WI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணியானது ஏற்கனவே இந்த ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Axar Patel

- Advertisement -

ஏற்கனவே முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த போட்டியிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது. அதே வேளையில் இந்த போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெற வெஸ்ட் இண்டீஸ் அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

அந்த வகையில் இன்றைய இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரரான ஷிம்ரன் ஹெட்மயர் விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பூரான் கூறுகையில் : ஹெட்மயரின் உடற்பகுதி தேர்வு முடிவுக்கு வந்துள்ளது.

Hetmyer 1

அவர் இந்த உடற்பகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இது எங்கள் அணிக்கு ஒரு அற்புதமான செய்தி, எனவே முடிந்தவரை அவரை அணியில் இணைக்க எதிர்பார்த்திருக்கிறோம். இப்போது என்னால் எதையும் உறுதியாக சொல்ல முடியாது என்றாலும் விரைவில் அவரை களத்தில் காணலாம் என்று பூரான் கூறியுள்ளார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரரான ஷிம்ரன் ஹெட்மயர் கடைசியாக கடந்த மே மாதம் ராஜஸ்தான் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய போது காயமடைந்தார். அதன் பிறகு எந்த வித போட்டியிலும் பங்கேற்கவில்லை.

இதையும் படிங்க : 3 ஆவது போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் மாஸ் சாதனையை படைக்க காத்திருக்கும் – இந்திய அணி

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த கடைசி ஒருநாள் போட்டியில் அவர் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. அதோடு இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் ஷிம்ரன் ஹெட்மயர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

Advertisement