3 ஆவது போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் மாஸ் சாதனையை படைக்க காத்திருக்கும் – இந்திய அணி

Indian Team
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற இந்திய அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கும் வேளையில் இன்றைய மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றால் ஒரு முக்கிய சாதனையை படைக்க காத்திருக்கிறது.

Shardhul Thakur India Dhawan Shreyas Iyer

- Advertisement -

மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா உள்பட சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதன் காரணமாக ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி தற்போது இந்த தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் அட்டகாசமான செயல்பட்ட இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியிருந்தது.

இந்நிலையில் இன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டி இந்திய அணிக்கு ஒரு முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையை ஒன்றை படைக்க காத்திருக்கிறது.

IND vs WI Mohammed Siraj India

அதன்படி ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டிஸ் அணியை இதுவரை இந்திய அணி ஒருநாள் தொடரில் ஒயிட் வாஷ் செய்ததில்லை. எனவே இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி விட்டால் அவர்களை ஒயிட் வாஷ் செய்து சாதனை படைக்கும்.

- Advertisement -

மேலும் இந்த தொடரோடு சேர்த்து 13 முறை இந்திய அணி எதிரணிகளை வைட் வாஷ் செய்து வெற்றி பெற்ற அணியாகவும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு ஜிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் நாட்டிலும் இந்திய அணி ஒயிட் வாஷ் செய்யும் சாதனை தற்போது காத்திருக்கிறது.

இதையும் படிங்க : நாடுகடந்த ஐபிஎல் வளர்ச்சி உலக கிரிக்கெட்டுக்கு ஆபத்தானது – ஆஸி ஜாம்பவான் கவலை, நடந்தது இதோ

எனவே நிச்சயம் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி இந்த சாதனையை படைக்கும் என நம்பலாம். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 ஆவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement