ஷிகார் தவான் பவுலிங் போட்டு விக்கெட் எடுத்த 4 பேட்ஸ்மேன்கள் யார் தெரியுமா ? – லிஸ்ட் இதோ

Dhawan
- Advertisement -

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான ஷிகர் தவான் ஐபிஎல் போட்டிகளில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் மூன்று அரை சதத்துடன் 380 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக இதுவரை ஐபிஎல் தொடரில் 184 போட்டிகளில் விளையாடி 44 அரைசதம் 2 சதம் உட்பட 5577 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

இப்படி பேட்டிங்கில் ஷிகர் தவான் கைதேர்ந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் ஷிகர் தவானும் ஐபிஎல் தொடரில் பந்துவீசி விக்கெட் கைப்பற்றி இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? ஆனால் அது உண்மைதான். ஷிகார் தவான் ஆரம்ப காலகட்டத்தில் அதாவது 2011ஆம் ஆண்டு மற்றும் 2012ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் பந்துவீசி உள்ளார்.

2011 ஆம் ஆண்டு 2 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டையும், 2012ஆம் ஆண்டு 6 ஓவர்கள் வீசி மூன்று விக்கெட்டையும் அவர் கைப்பற்றியுள்ளார். இப்படி தவான் கைப்பற்றிய 4 விக்கெட்டுகள் யார் என்பது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியம் அடையவும் வாய்ப்பு உள்ளது. அதன்படி அவர் வீழ்த்திய 4 பேட்ஸ்மேன்களின் லிஸ்ட் இதோ :

dhawan 1

சௌரவ் கங்குலி : 2012ஆம் ஆண்டு நடைபெற்ற புனே அணிக்கு எதிரான போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் சார்பாக விளையாடிய ஷிகர் தவன் கங்குலியை வீழ்த்தினார், ஆனாலும் இந்த போட்டியில் புனே வெற்றிபெற்றது. ஷான் மார்ஷ் : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக மட்டுமே விளையாடிய மார்ஷ் முதல் சீசனில் ஆரஞ்சு தொப்பையையும் கைப்பற்றி அசத்தியவர் இப்படிப்பட்ட ஒரு பேட்ஸ்மேனை ஷிகார் தாவன் ஆட்டம் இழக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வார்னர் : ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த அதிரடி வீரராகவும் தற்போது வரை துவக்க வீரராகவும் விளையாடி வரும் அதிரடி பேட்ஸ்மேன் வார்னரை ஷிகார் தாவன் வீழ்த்தியுள்ளார். சேவாக் :டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக சேவாக் விளையாடியபோது டெக்கான் சார்ஜர்ஸ் அணி சார்பாக விளையாடிய தவான் அவரை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement